ஜவான் படத்தில் விஜயிற்கு இந்த ரோலா.. வேற கேரக்டரே தெரியாத அட்லிக்கு - கலாய்க்கும் நெட்டிசன்கள்!
ஜவான் படத்தில் நடிகர் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மாஸ் காட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் அட்லீ
தமிழ் சினிமாவில் “ராஜா ராணி ” என்ற படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லீ, அடுத்தடுத்து தெறி, மெர்சல், பிகில் என விஜய்யுடன் இணைந்து சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்தார்.
இந்த திரைப்படங்களில் சில அட்லீக்கு நினைத்த வரவேற்பை எடுத்து கொடுக்கவில்லை.
மாறாக தற்போது பாலிவுட் பக்கம் சென்றுள்ளார். மகன் பிறந்த பின்னர் வெளியாகும் முதல் திரைப்படம் தான் ஜவான்.
இந்த திரைப்படத்தில் முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் வந்து கலக்கியுள்ளார்களாம்.
விஜயிற்கு என்ன கெட்டப் தெரியுமா?
இந்த நிலையில் ஜவான் திரைப்படத்தில் நடிகர் விஜய் நடிப்பதாக சில தகவல்கள் வெளியாகின.
அந்த வகையில் ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானிற்காகவும் அட்லீக்காகவும் விஜய் பொலிஸ் கெட்டப்பில் நடிக்கிறாராம்.
அத்துடன் அட்லீ இயக்கத்தில் வெளியான விஜய் படங்கள் சில பொலிஸ் கெட்டப்பில் தான் இருந்தன.
ஆகவே இந்த செய்தியை பார்த்த இணையவாசிகள், “ அட்லீக்கு விஜயிற்கு கொடுக்க வேற ரோலே இல்லையா.?..” என கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |