என்னால விஜய் திட்டு வாங்குவார்! மனம் திறந்த சங்கவி
அஜித், விஜய் என தற்போதைய முன்னணி நடிகர்களுடன் தொடக்க காலத்தில் ஜோடி போட்டு நடித்தவர் சங்கவி.
1977ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி கர்நாடகாவில் பிறந்த சங்கவியின் உண்மையான பெயர் காவியா ரமேஷ்.
14 வயதில் அஜித்தின் அமராவதி படத்தில் நடித்தார் சங்கவி, அதில் குடும்ப பெண்ணாக பவ்யமாக நடித்திருப்பார்.
தொடர்ந்து ரசிகன் படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடித்தார், இது சூப்பர் ஹிட்டடிக்க சங்கவிக்கு வாய்ப்புகள் குவிய தொடங்கியது.
வருடத்திற்கு 16 படங்கள் வரை இவரது படங்கள் வெளியான வருடங்களும் உண்டு, காரணம் அனைத்து படங்களையும் ஒப்புக்கொண்டு நடித்தது தான் என்கிறார் சங்கவி.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், அமராவதியில் குடும்ப பெண்ணாக நடித்ததால் ரசிகன் படத்துக்கு இவர் சரியாக வருவாரா என்ற சந்தேகம் எஸ்ஏசி சாருக்கு கடைசி வரை இருந்தது.
அந்த படத்தில் துடிப்பு மிக்க பெண்ணாக நடித்திருப்பேன், அடுத்தடுத்த வந்த படங்களும் அப்படியே அமைந்தது, பொற்காலத்தை தவிர.
ஆனால் தெலுங்கில் அப்படியே எதிர்மறையாக குடும்ப பாங்கான கதாபாத்திரங்கள் மட்டுமே வந்தன.
ஒரு கட்டத்தில் சங்கவி யார் என்று தெரிந்த பின்னர் கவர்ச்சியான பாத்திரங்களை தவிர்க்க ஆரம்பித்தேன், விஷ்ணு படத்தின் போது குளிர்ச்சியான தண்ணீரில் மூழ்கி வர வேண்டும்.
நான் செய்துவிட்டேன், ஆனால் விஜய்யுக்கு நடுங்க தொடங்கியது, உடனே எஸ்ஏசி விஜய்யை திட்டினார்.
அவர் உடனே, உன்னால் தான் இதெல்லாம் என என்னை பார்த்து கூறினார், எஸ்ஏசியிடம் திட்டு வாங்காத புதுமுக நடிகை என்றால் அது நானாக தான் இருப்பேன்.
அஜித் திறமையானவர், விஜய்யும் அப்படித்தான், விஜய் நடனத்தில் பட்டையை கிளப்புவார், 99 படங்களில் நடித்திருந்தாலும் ரசிகன் படம் எனக்கு எப்போதுமே ஸ்பெஷல் தான் என தெரிவித்துள்ளார்.