இந்த தலைவா பட நடிகையை ஞாபகம் இருக்கா? இப்போ ஆளே மாறிட்டாங்களே!
தலைவா படத்தில் நடித்து தமிழ் ராசிகர்கள் மத்தியில் பிரபல்யமான நடிகை ராகினி நந்தவானியின் தற்போதைய புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தில் பெரும்பாலானவர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தலைவா திரைப்படம்
2013ம் ஆண்டு இயக்குநர் விஜய் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் தலைவா.
பல தடைகளை தாண்டி வெளிவந்த இப்படம் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றதுடன். வசூல் ரீதியில் சாதனை படைத்தது.
இப்படத்தில் விஜய், சத்யராஜ், சந்தானம், அமலா பால், பொன்வண்ணன், அபிமன்யு சிங், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
இதில் இரண்டாவது கதாநாயகியாக ராகினி நந்தவானி நடித்திருப்பார். இவர் தெலுங்கு மற்றும் மலையாளங்களில் சில திரைப்படங்களில் நடித்துள்ளதுடன், பல தொலைக்காட்சி தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகை ராகினி நந்தவானியின் தற்போதைய புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தில் ரசிகர்களால் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
