பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யப்படும்! உலகையே திரும்பி பார்க்க வைத்த நாடு
பாலியல் குற்றவாளிகளுக்கு இனி இரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யப்படும் என தாய்லாந்து நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
தாய்லாந்தில் பாலியல் குற்றவாளிகள், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டும், தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு இரசாயன முறைப்படி ஆண்மை நீக்கம் செய்யப்படுமாம்.
இதனால், நீண்ட கால சிறை தண்டனை விதிப்பு இந்த வழக்கில் இனி தாய்லாந்தில் இருக்காது என்றே கூறப்படுகிறது.

குறித்த நடைமுறைக்கு இரண்டு மருத்துவர்களின் ஒப்புதல் பெறப்படும் எனவும், தொடர்புடைய குற்றவாளி 10 ஆண்டுகள் கண்காணிக்கப்படுவார் எனவும் தாய்லாந்து நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
மார்ச் மாதம் கீழ்சபை நிறைவேற்றிய குறித்த மசோதாவானது, திங்கள்கிழமை 145 செனட்டர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு கொண்டுவரப்பட்டு, அதன் பின்னர் நாட்டின் அரச குடும்பத்து ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றே தெரிய வந்துள்ளது.
பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் மசோதா அமுலுக்கு வந்தால், போலந்து, தென் கொரியா, ரஷ்யா, எஸ்டோனியா மற்றும் சில அமெரிக்க மாகாணங்களின் வரிசையில் தாய்லாந்தும் இடம்பெறும்.