நாவில் சுவையூறும் தேன் மிட்டாய்! இந்த மூன்று பொருட்கள் இருந்தாலே போதுமாம்
பொதுவாக நமது வீடுகளில் தேன் மிட்டாய் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும்.
இந்த மிட்டாய்களை வித்தியாசமான நிறங்களில் செய்ய முடியும் என்பதால் பெரியவர்களுக்கும் இது மிகவும் பிடிக்கும்.
அந்த வகையில் இந்த தேன் மிட்டாய்க்கு இட்லி மா மட்டும் இருந்தால் போதும் வெறும் 5 நிமிடங்களில் செய்யலாம்.
இது எப்படி செய்றாங்க என்பதனை கீழ் தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
அரிசி - 1 பவுல்
உளுத்தம் பருப்பு - 1/4 கோப்பை
பேக்கிங் சோடா - 1/4 தேக்கரண்டி
கேசரி பவுடர் - 1 சிட்டிகை
சர்க்கரை - 1 பவுல்
தயாரிப்பு முறை
முதலில் அரிசி மற்றும் உளுத்தம் பருப்பு ஆகியவற்றை மேற்குறிப்பிட்ட அளவில் எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு சுமார் 4 மணிநேரத்திற்கு ஊற வைக்க வேண்டும்.
பின்னர் அதனை எடுத்து ஒரு மிக்ஸி சாரில் அல்லது அம்மியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
இதனை தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு அதில் பாவு காய்ச்ச வேண்டும். கம்பி பதம் வந்தவுடன் இதனை அடுப்பிலிருந்து இறக்க வேண்டும். மாவில், பேக்கிங் சோடா மற்றும் கேசரி பவுடர் என்பவற்றை சேர்த்து ஒன்றாக கிளற வேண்டும்.
அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தேக்கரண்டி அளவு மாவை எடுத்து எண்ணெய் ஊற்றவும்.
மிட்டாய்கள் பொன்னிறமாக பொரிந்தவுடன் அதனை சர்க்கரை பாகுவில் போட்டு பிரட்டி இறக்கினால் சுவையான தேன் மிட்டாய் தயார்!