5 நாளுக்கு மேல் இட்லி மா புளிக்காமல் இருக்கணுமா? இதை மட்டும் போட்டால் போதும்
பொதுவாகவே சிலரது வீடுகளில் இட்லி, தோசைதான் பிரதான உணவாக இருக்கும். அப்படி இட்லி அல்லது தோசைக்கு மா அரைத்து வைக்கும் போது மா உடனே புளித்து போய் விடும்.
இதனால் புளித்த மாவை யாரும் சமைக்கவும் விரும்ப மாட்டார்கள், சாப்பிடவும் ஆசைப்படமாட்டார்கள். அதனால் அதை கீழே தான் கொட்டுவார்கள்.
ஈஸியான டிப்ஸ்
வெயில் காலத்தில் இட்லி அல்லது தோசைக்கு மாவு அரைக்கும் போது. மாவு அரைத்த ஒரு மணி நேரத்திற்குள் பிரிட்ஜியில் வைத்துவிடவும்.
அப்படி பிரிட்ஜி இல்லை என்றால் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அந்த தண்ணீர் நடுவில் மாவு பாத்திரத்தை வைக்கவும்.
இட்லிக்கோ, தோசைக்கோ மாவு அரைக்கும்போது அரிசியை ஊற வைப்பதில் கவனம் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் 3 முதல் 4 மணி நேரம் அரிசியை ஊறவைத்தால் போதுமானது.
அதிகமாக ஊற வைக்கும் போது மா விரைவில் புளித்து விடும். மேலும் மாவை அரைக்கும் போது ஐஸ் தண்ணீரை ஊற்றிக்கொள்ளலாம்.
பிறகு கிளரும் போதும் கைகளை கொண்டு கிளராமல் கரண்டியை பயன்படுத்தினால் மா புளிக்காமல் இருக்கும். புதிய மாவை அரைத்த பிறகு ஒரு வாழை இலையை கவிழ்த்தி வைத்து கொள்ள வேண்டும்.
அந்த பாத்திரத்தை பிரிட்ஜில் வைத்து பின்னர் பயன்படுத்தலாம். இவ்வாறு செய்வதால் 15 நாட்கள் கூட மாவு புளிக்காமல் இருக்கும். மேலும், வாழை இலைக்கு பதிலாக, 2 வெற்றிலை கூட எடுத்து பயன்படுத்தலாம்.
வெற்றிலையின் உள்பக்கம் மாவில் படுமாறு பயன்படுத்த வேண்டும் இதனால் மாவில் புளிப்புத்தன்மை இருக்கவே இருக்காது.