25 நாட்களில் தாய் கிழவி படம் செய்த வசூல்... எத்தனை கோடி தெரியுமா?
வெற்றிப்படமாக சென்று கொண்டிருக்கும் தாய் கிழவி படத்தின் 25 நாள் வசூல் எவ்வளவு என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தாய் கிழவி
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், ராதிகா நடித்து வெளியான படம் தான் தாய் கிழவி. இப்படத்தினை சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள நிலையில், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளது.
வெளியான வெறும் 10 நாட்களில் 50 கோடி வரை வசூலை வாரிக் குவித்த இப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தினை இந்த படத்தின் குழு சமீபத்தில் கொண்டாடியது.
இதில் சிவகார்த்திகேயன் கண்கலங்கி நன்றி தெரிவித்ததுடன், ராதிகாவும் இப்படத்தின் வெற்றியைக் குறித்தும், சிவகார்த்திகேயன் குறித்தும் பல விடயங்களைக் கூறியுள்ளார்.

25 நாள் வசூல் வேட்டை
ராதிகாவின் தெரிக்கவிடும் நடிப்பிலும், பெண்களுக்கான முன்னேற்றத்தைக் குறித்து வந்துள்ள டயலாக் அனைத்து ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
இதன் காரணமாக முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வந்தது. இந்நிலையில், 25 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளதுடன், வசூலையும் வாரிக்குவிக்கின்றது.

இதுவரை ரூ. 80 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதுடன், இப்படத்தினை எடுப்பதற்கு வெறும் 10 கோடி தான் செலவானதாகவும் கூறப்படுகின்றது. மக்களின் ஆதரவை அதிகமாக பெற்றுள்ள இப்படம் இனி வரும் நாட்களிலும் வசூலைக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |