வேரோடு சாய்ந்த மரணம்! காலையில் எழுந்து கம்பீரமாக நின்ற அதிர்ச்சி
வேலூர் மாவட்டத்தில் கோவில் ஒன்றின் வளாகத்தில் இருந்த 60 ஆண்டுகால பழமை வாய்ந்த அரச மரம் வேரோடு சாய்ந்த நிலையில், மறுநாள் கம்பீரமாக நின்ற சம்பவம் நடந்துள்ளது.
வேரோடு சாய்ந்த அரச மரம்
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுக்கா மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலங்கட்டி மழையுமடன் பயங்கரமான சூறைக்காற்றும் வீசியுள்ளது.
வேப்பங்கநேரி கிராமத்தில் உள்ள படவேட்டம்மன் ஆலய வளாகத்தின் முன்புறம் சுமார் 60 ஆண்டுகள் பழமைவாய்ந்த அரச மரம் இருந்த நிலையில், இது குறித்த சூறைக்காற்றால் வேரோடு சாய்ந்துள்ளது.
வேரோடு சாய்ந்த மரத்தின் கிளைகளை வெட்டும் பணிகள் தொடங்கி, கிளைகளையும் வெட்டி எடுத்துள்ளனர். பின்பு இரவு நேரமானதால் அப்படியே விட்டுச் சென்ற நிலையில், நள்ளிரவில் ஆச்சரியம் நடந்துள்ளது.
அதிகாலை 4 மணி அளவில் சாய்ந்து கிடந்த அரச மரம் தானாக எழுந்து நின்றுள்ளதை, அருகில் இருந்த பால் பண்ணையைச் சேர்ந்த தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ''கன மழை மற்றும் சூறைக்காற்றால் சாய்ந்த அரச மரம் தானாக எழுந்து நின்றுள்ளது. இதை தெய்வ சக்தியாகவும், ஆன்மீக சக்தியாகவும் பார்க்கிறோம். உலகில் தெய்வம் இருப்பதற்கு என்பதற்கு இதுவே சாட்சி'' என்றனர்.
மேலும் இந்த நிகழ்வை அறிவியல் விஞ்ஞானமாகவும் பார்ப்பதாக சிலர் தெரிவித்துள்ளனர். கிளைகள் வெட்டி எடுத்த பிறகு மரத்தின் எடை குறைந்ததால் புவி ஈர்ப்பு சக்தியால் மரம் தானாக எழுந்து நின்றுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.