பக்தர்களை துடப்பத்தால் விளாசிய பூசாரி! காரணம் என்ன?
கோவில் திருவிழா ஒன்றில் பக்தர்களை பூசாரி ஒருவர் துடப்பத்தால் அடிக்கும் வினோத வழிபாடு அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.
திருவிழாவில் வினோத வழிபாடு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே டி.கொத்தப்பள்ளி கிராமத்தில் 383 ஆண்டுக்காலம் பழமை வாய்ந்த தர்மராஜ சுவாமி கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் வருடந்தோறும் சித்திரை மாதம் 10 நாட்கள் கோவில் திருவிழா நடைபெறுமாம். திருவிழாவிற்காக 10 நாட்கள் விரதமிருக்கும் தர்மராஜ சுவாமி கோவில் பூசாரிக்கு அருள் வந்து, பக்தர்களை துடப்பம், முறத்தால் தலை மீது அடிக்கும் வினோத வழிபாடு நடைப்பெற்றது.
இவ்வாறு துடப்பம், முறத்தால் அடிவாங்குவதால் குழந்தை பாக்கியம், கடன் பிரச்சனைக்கு தீர்வு, திருமண தடை நீங்கி குடும்பங்களில் சமாதானம் உள்ளிட்டவை நடப்பதாக ஐதிகம் உள்ளது.
இதில் தமிழகத்தில் உள்ள பக்தர்கள் மட்டுமின்றி, கர்நாடகவைச் சேர்ந்த பக்தர்களும் கலந்து கொண்டு வழிபட்டுள்ளனர்.