Viral video: இது ரொம்ப புதுசா இருக்கே.. ஆங்கில வகுப்பில் ஆசிரியர் செய்த தரமான செயல்
ஆசிரியர் ஒருவர் தன்னுடைய வகுப்பில் மாணவர்களுக்கு எழுத்து பிழையுடன் ஆங்கில வார்த்தைகளை கற்பிக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக சில மோசடி வேலைகள் பார்த்து பாடசாலைக்குள் ஆசிரியர்களாக வந்து அலப்பறை செய்யும் ஆசிரியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.
அரச பள்ளிகளில் ஆசிரியர் பணிக்காக உள்ளே வந்து மாணவர்களுக்கு பாடம் எடுக்காமல் தவறாக நடந்து கொள்வது, உறங்குவது, அவர்களை வைத்து ரீல்ஸ் எடுப்பது போன்ற வேலைகளை செய்கிறார்கள்.
இது தொடர்பான காணொளிகள் வைரலாகிய பின்னர் அரசாங்கம் அவர்களை இடம் மாற்றம் செய்யும்.
தவறாக பாடம் எடுத்த ஆசிரியர்

அந்த வகையில், சத்தீஸ்கரின் பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் ஆங்கில வார்த்தைகளை தவறாக எழுதிப் போட்டு படிப்பிக்கும் காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அரச பள்ளியில் மாணவர்களுக்கு தாய்மொழி எவ்வளவு அவசியமோ அதே அளவிற்கு அவர்களுக்கு ஆங்கில அறிவும் அவசியம். இது போன்று தவறாக கற்பிக்கும் பொழுது குழந்தைகள் எப்படி ஆங்கில அறிவை வளர்த்து கொள்ளும்? என்ற கேள்வி மக்களுக்கு எழுகிறது.
இந்த காணொளி வைரலான பின்னர் கல்வித்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து, குறித்த ஆசிரியரை சஸ்பெண்ட் செய்துள்ளது. அவர் அன்றைய தினம் எடுத்த வகுப்பில் சுமாராக 42 குழந்தைகள் இருந்தார்கள் என்றும், இரண்டு ஆசிரியர்கள் பணியில் இருந்தார்கள் என்றும் கூறப்படுகிறது.
பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு கல்வி அறிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் பாடசாலைக்கு அனுப்புகிறார்கள். இது போன்ற ஆசிரியர்களின் செயல்களால் பெற்றோர்களுக்கு அரச பள்ளியில் மீதுள்ள நம்பிக்கை மற்றும் ஆர்வம் குறைகிறது.
Teacher suspended in Chhattisgarh’s Balrampur after video goes viral showing him teaching ‘Iey means eye, Noge means nose’ to students pic.twitter.com/xHL4yaayu6
— ClearView (@ClearView_N) November 17, 2025
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |