தந்திரமாக காரியத்தை சாதித்துக்கொள்ளும் 3 ராசிகள்... உங்க ராசியும் இதுல இருக்கா?
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, காதல், பொருளாதார நிலை, தனித்துவமான திறமைகள் மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என்று குறிப்பிடப்படுகின்றது.
அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே தங்களின் காரியத்தை தந்திரமாக சாதித்துக்கொள்ளும் ராஜ தந்திர குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

அப்படி சுயநல நோக்கத்தை ரகசியமாக திணித்து யாரும் அறியாத வகையில் காரியத்தை சாதித்துக்கொள்ளும் திறன் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்

மிதுன ராசியில் பிறந்தவர்கள் வெளிப்படை தன்மை அற்றவர்களாகவும், இரண்டை குணத்துக்கு பெயர் பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்களுக்கு சுயநல குணம் சற்று அதிகமாகவே இருக்கும். தங்களின் காரியம் சரியாக நடக்க வேண்டும் என்றால், எவ்வாறு காய் நகர்த்த வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
தகவல்களைப் பெறுதல், திறன்களைக் கற்றுக்கொள்வது மற்றும் பல்வேறு வாழ்க்கை அனுபவங்களை முயற்சிப்பது போன்ற அவர்களின் ஆர்வத்துடன் அந்த குணமும் சேர்ந்தால் அவர்ளால் சாதிக்க இயலாத காரியமே இருக்காது.
கன்னி

கன்னி ராசியில் பிறந்தவர்கள் புத்திசாலித்தனமான புதன் ஆற்றலால் ஆளப்படுகின்றார்கள். அதனால் இவர்களுக்கு இயல்பாகவே ராஜதந்திர குணம் இருக்கும்.
இவர்கள் வாழ்க்கை முழுதும் தங்களின் விருப்பங்களுக்கும் சுரந்திரத்துக்கும் மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
தங்களின் காரியத்தை சாதித்துக்கொள்ள எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லக்கூடிய சுயநல குணம் இவர்களுக்கு அதிகமாக இருக்கும்.
கும்பம்

கும்ப ராசியில் பிறந்தவர்கள் வாழ்க்கையைப் பற்றிய ஒரு பிரிக்கப்பட்ட கொள்கையை கொண்டவர்களாக இருப்பார்கள்.
சூழ்நிலை எவ்வளவு மோசமாக இருந்தாலும் தங்களின் காரியத்தில் மட்டுமே கண்ணாக இருப்பார்க்ள. தங்களின் தேவையை நிறைவேற்றிக்கொள்ள யாரை வேண்டுமானாலும் பலியாக மாற்றிவிடும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.
இந்த ராசிக்காரர்கள் தனிப்பட்ட வாழ்க்கையை விட பெரிய உண்மைகள் மற்றும் நுண்ணறிவுகளுடன் தொடர்பில் இருப்பதையே அதிகம் விரும்புவார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |