உலகில் அறிவாளிகள் அதிகமாக உள்ள நாடு எது தெரியுமா?
பொதுவாக உலகில் உள்ள அனைவரும் ஏதாவது ஒரு வகையில் திறமையானவர்களாக தான் பிறக்கிறார்கள்.
அதனால் யார் ஒருவர் தன்னிடம் உள்ள திறமையை இனங்கண்டு அதற்காக உழைக்கிறார்களோ அவர்களே அந்த துறையில் சிறந்தவர்களாக விளங்குகிறார்கள்.
ஒருவரின் உழைப்பை வைத்து அவர்களுக்கான வெற்றி, தோல்வி இரண்டுமே தீர்மானிக்கப்படுகிறது. ஒருவரின் புத்திக்கூர்மையை அவர்களின் IQ பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த அளவீட்டை பயன்படுத்தி, கல்வியின் தரம், கலாச்சார முன்னுரிமைகள் மற்றும் கொள்கை செயல்திறன் ஆகியவற்றை கண்டறியலாம்.
இதன்படி, அறிவாளிகள் அதிகம் வாழும் நாடு எது என கண்டுபிடிப்பதற்காக The Intelligence of Nations என்ற தலைப்பில் ஒரு ஆய்வு நடக்கிறது. இதன் மூலம் பல நாடுகளின் முழு விவரங்கள் வெளியானது.
அந்த வகையில், அதிகமான அறிவாளிகள் வாழும் நாடுகளின் விவரங்களை தொடர்ந்து எமது பதிவில் விளக்கமாக காணலாம்.

1. ஜப்பான்
உலக நாடுகளில் ஜப்பானில் வாழும் மக்களின் IQ 106.48 மதிப்பெண்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் சிறந்த புத்தியுள்ளவர்களாக இருப்பார்கள். பிரச்சினைகளை தீர்ப்பதில் இவர்களை மிஞ்ச முடியாது. அதனால் தான் எலக்ட்ரானிக்ஸ், கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் என தரம் வாய்ந்த பொருட்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. நாட்டின் வளர்ச்சிக்கும் இதுவே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
2. தைவான்
106.47 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கும் தைவானில் வசிக்கும் மக்கள் புத்திசாலிகளாக இருப்பார்கள். இதனால் உலக நாடுகளில் அதிகமாக முன்னேற்றம் அடைந்து வருகிறது. இங்கு வாழும் மக்களிடம் பேசி ஜெயிப்பது என்பது கனவாகவே போய் விடும்.

3.சிங்கப்பூர்
சிங்கப்பூரில் வாழும் மக்களின் IQ 105.89 மதிப்பெண்களாக கண்டறியப்பட்டுள்ளது. மாணவர்கள் எப்போதும் புதுவிதமான சிந்தனையில் தான் இருப்பார்கள். பகுத்தறிவு திறன் இவர்களின் கல்வியில் அதிகமாக தாக்கம் செலுத்துகிறது. புத்திசாலிகளாக இருப்பதால் சில முடிவுகளை தெளிவாக எடுப்பார்கள்.
4. ஹாங்காங்
தென்கிழக்கு ஆசிய நாடான ஹாங்காங் IQ 105.37 மதிப்பெண் பெற்று நான்காவது இடத்தை பிடிக்கிறது. கற்றல் மையமாக பார்க்கப்படும் இந்த நாட்டில் வாழும் மக்கள் புத்திசாலிகளாகவே இருப்பார்கள். அவர்களின் உணவில் அதிகமான அயோடின் சேர்க்கப்படுவதும் இதற்கான முக்கிய காரணமாகும்.
5. சீனா
இந்தியா, இலங்கை போன்ற நாடுகளுடன் முக்கிய தொடர்பில் இருக்கும் சீனாவில் வாழும் மக்களின் IQ 104.1 மதிப்பெண்கள் என கண்டறியப்பட்டுள்ளது. புத்திசாலிகள் அதிகமாக வாழ்வதால் உற்பத்திகள் மற்றும் கண்டுபிடிப்புக்கள் இங்கு அதிகமாக நடக்கிறது. தற்போது இவர்கள் கண்டுபிடித்திருக்கும் கரப்பான் பூச்சி போட்ட காபி இணையவாசிகள் மத்தியில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |