ரயில் பயணாளர்களுக்கு டீ விற்பனை செய்த வியாபாரி வைரலாகும் காணொளி
இந்தியாவின் ரயில்வே பயணாளர்களுக்கு சிறிய ஜன்னல் வழியாக தேனீர் விற்பனை செய்த வியாபாரியின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வைரல் காணொளி
சமூக வலைத்தள பக்கத்தில் பல வீடியோக்கள் வைரலாகி வரும். அவற்றில் ஆச்சரியப்பட வைக்கும் பல வீடியோக்களை பார்த்திருப்போம். அப்படியான ஒரு வீடியோ தான் இன்று வைரலாகி வருகின்றது.
ஒரு இந்திய பயணிகள் ரயிலில் நடக்கும் காட்சியை பார்க்க முடிகிறது. ரயிலில் உள்ள பயணி ஒருவர் டீ கேட்க, ஆனால், டீ கொடுப்பதற்கு
ஜன்னலில் வழி இல்லாததால், ரயிலுக்கு வெளியே ஜன்னலுக்கு அருகில் நிற்கும் டீ விற்பனையாளர், ஒரு பேப்பர் கப்பை ஜன்னலில் உள்ள சிறிய துளைகளின் வழியாக மடக்கி அனுப்புகிறார்.
பின்னர், பயணி அந்த பேப்பர் கப்பை சரியாக்க, ரயில் ஜன்னலில் இருக்கும் சிறிய ஓட்டையின் வழியாக தனது டீ கேனின் துவாரத்தை உள்ளே அனுப்பி இறுதியாக தேநீரை பரிமாறுகிறார். இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |