டீ தூள் விற்று கோடிகளில் வருமானம்! ஒரு மருத்துவர் தொழிலதிபரான கதை
வாழ்க்கை பல்வேறு திருப்புமுனைகளை கொண்டது எங்கு ஆச்சரியப்படுத்தும் எங்கு அதிர்ச்சி கொடுக்கும் என்பது யாருக்கும் தெரியாது.
டாக்டர் ரூபாலி அம்பேகாஒன்கார் (Rupali Ambegaonkar ) தனது எம் பி பி எஸ் பட்டப்படிப்பை மும்பையில் பூர்த்தி செய்தார், மருத்துவ பட்டப்படிப்பை பூர்த்தி செய்த டாக்டர் ரூபாலி தனது மகளின் உடல் நிலை காரணமாக மருத்துவ தொழிலில் இருந்து விலக நேரிட்டது.
இறுதியில் அவர் தேயிலை வியாபாரத்தை தேர்ந்தெடுத்தார் கடந்த 2010 ஆம் ஆண்டு ரூபாய் 100 சதுர அடி பரப்பை கொண்ட ஓர் அலுவலகத்தையும் 20000 சதுர அடி கொண்ட போர் தொழிற்சாலையையும் சுமார் 30 லட்சம் ரூபாய் முதலீட்டில் மும்பை முள்ளான் பகுதியில் ஆரம்பித்தார்.
ரூபாலி தனது நிறுவனத்திற்காக சீனாவில் இருந்து தேயிலை கொழுந்துகளை இறக்குமதி செய்து அவற்றை பதப்படுத்தி பல்வேறு வித்தியாசமான பிளேவர்களை சேர்த்து மும்பையில் அதனை பொதியிட்டு விற்பனை செய்தார்.
டீ கல்ச்சர் வேர்ல்ட் (Tea Culture of the World (TCW) என்ற பெயரில் குறித்த தேயிலை விற்பனை செய்யப்பட்டது. ஜப்பான், சீனா, வியட்நாம், தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியாவின் பல பாகங்களிலிருந்து கைகளினால் பறிக்கப்பட்ட தேயிலை கொழுந்துகளை கொண்டு சுமார் 80 வகையான வித்தியாசமான ஃப்ளேவர்களைக் கொண்ட தேயிலை வகைகளை உற்பத்தி செய்கின்றார்.
இந்த தேயிலை ஆன்லைனிலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் 37 கிளைகள் வழியாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
“இந்த நிறுவனம் தொலைபேசி அழைப்புகளை பதிலளிப்பதற்கு ஒரு யுவதியும் தேயிலையை டெலிவரி செய்வதற்கு ஒரு சாரத்தையும் என்ற அடிப்படையில் மிகச்சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்டது தற்பொழுது இந்த நிறுவனத்தில் சுமார் 110 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்” என 45 வயதான ரூபாய் கூறுகின்றார்.
மும்பையின் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த குடும்பப் பின்னணியை கொண்ட டாக்ட ரூபாலி இன்று வியாபார துறையில் கொடிகட்டி பறக்கும் ஓர் பெண்மணியாக பரிணமித்துள்ளார்.
தனது பாட்டனார் ஓர் சுதந்திரப் போராட்ட வீரர் என ரூபாலி பெருமிதத்துடன் கூறுகின்றார்.
மருத்துவ பட்டப்படிப்பை பூர்த்தி செய்த பின்னர் மருத்துவர் ஒருவரை மணம் மடித்த ரூபாலி கணவரின் மருத்துவ சிகிச்சை நிலையத்தில் பணியாற்றி வந்தார்.
எனினும் அவர்களுக்கு குழந்தை பிறந்ததும் அவர்களுடைய வாழ்க்கையில் திடீர் திருப்பம் ஏற்பட்டது.
“எனது மகளுக்கு இருதயத்தில் துளை ஏற்பட்டுள்ளது அவருக்கு அடிக்கடி சிகிச்சை அளிக்க வேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது எனது மகள் டயலாக்ஸியா நோயினாலும் பாதிக்கப்பட்டுள்ளார் அவரினால் சாதாரண பிள்ளைகளைப் போல் வேகமாக சரளமாக பேச முடியவில்லை இதனால் நான் எனது மருத்துவ தொழிலை கைவிட்டுவிட்டு வீட்டில் எனது மகளை பராமரித்துக் கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்தினேன்” என ரூபாலி கூறுகின்றார்.
அதன் பின்னர் தேயிலை வியாபாரத்தில் காட்டிய நாட்டத்தினால் பெரு வெற்றிகளை ரூபாலி பெற்றுக் கொண்டார்.
இந்த நிறுவனத்தின் சில ப்ளேவர்களைக் கொண்ட ஒரு கிலோ தேயிலை 60000 ரூபா, 50000 ரூபா என விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வாழ்க்கை முடிந்து விட்டது என தோல்வியில் துவண்டு போகும் பலருக்கு டொக்டர் ரூபாலி அல்லது பிரபல வர்த்தகர் ரூபாலியின் வாழ்க்கை ஒர் சிறந்த எடுத்துக்காட்டு என்றால் பிழையாகாது.
நெய் விற்று மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் பெண்! தன்னம்பிக்கை கதை