குழந்தைகளை குஷியாக்கும் மொறு மொறு வெங்காய பக்கோடா! வெறும் பத்தே நிமிடம் போதும்
பொதுவாகவே குழந்தைகள் இருக்கும் வீடுகளில் மாலை நேரம் ஆனதுமே ஏதாவது ஸ்நாக்ஸ் வாங்கிதர சொல்லி குழந்தைகள் நச்சரிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
ஆனால் அவ்வாறான நேரங்களில் கடைகளில் ஸ்நாக்ஸ் வாங்கிக்கொடுப்பது குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல.

இந்த பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும் வகையில், வீட்டிலேயே ,மிகவும் எளிமையான மற்றும் ஆரோக்கியமான முறையில், அசத்தல் சுவை மொறு மொறு வெங்காய பக்கோடா எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
அரைப்பதற்கு
சோம்பு -1தே.கரண்டி
இஞ்சி - 2 துண்டு
பூண்டு - 10 பல்

பக்கோடாவிற்கு தேவையானவை
வெங்காயம் - 3 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - 2 கொத்து
கொத்தமல்லி - சிறிது
கோதுமை மாவு - 3 மேசைக்கரண்டி
அரிசி மாவு - 3 மேசைக்கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
சூடான எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
தண்ணீர் - சிறிதளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை
முதலில் இஞ்சி, பூண்டு, சோம்பு ஆகியவற்றை ஒரு மிக்சர் ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தில் நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துவிட்டுக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதனுடன் 3 டேபிள் ஸ்பூன் கோதுமை மாவு, அரிசி மாவு மற்றும் சுவைக்கேற்ப உப்பு ஆகியவற்றையும், மிளகாய் தூளையும் சேர்த்து கைகளால் நன்றாக கிளறி விட வேண்டும்.அதன் பின்னர் சிறிது நீரை தெளித்து, கைகளால் நன்கு பிசைந்து விட வேண்டும்.
கடைசியாக ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்து வைத்துள்ள வெங்காய கலவையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து எண்ணெயில் உதிர்த்து விட வேண்டும்.

வெங்காயமானது நன்கு பொன்னிறமான மாறியதும் ஒரு தட்டிற்கு மாற்றினால் அவ்வளவு தான் அசத்தல் சுவையில், வெங்காய பக்கோடா தயார். இது குழந்தைகளுக்கு ரொம்பவும் பிடிக்கும் வகையில் மொறு மொறுப்பான சுவையில் இருக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |