தோசைக்கு பக்காவாக பொருந்தும் புளி கார சட்னி... இப்படி செய்து பாருங்க
தென்னிந்திய உணவுகளில் இட்லி,தோசை முக்கிய இடம் வகிக்கின்றது. ஆனால் இட்லி மற்றும் சோசையின் சுவையை மேமம்படுத்துவதில் சட்னி வகைகள் பெரும் பங்கு வகிக்கின்றன.
பொதுவாகவே இட்லி அல்லது தோசைக்கு தொட்டுக்கொள்ள தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, புதினா சட்னி ஆகியவற்றில் ஒன்றை தான் பெரும்பாலும் செய்வார்கள்.
சற்று வித்தியாசமான முறையில் குறிப்பாக தோசைக்கு பக்காவாக பொருந்தும் புளி கார சட்னியை எவ்வாறு அசத்தல் சுவையில் செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
புளி - எலுமிச்சை அளவு
பச்சை மிளகாய் - 10
சின்ன வெங்காயம் - 15 அல்லது 20
பூண்டு - 10
கடுகு - ¼ தே.கரண்டி
கடலைப்பருப்பு - ½ தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1தே.கரண்டி
பெருங்காய்த்தூள் - ¼ தே.கரண்டி
மஞ்சள்தூள் - ¼ தே.கரண்டி
நல்லெண்ணை - தேவையான அளவு
வெல்லம் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கருவேப்பிலை - ஒரு கொத்து
செய்முறை
முதலில் புளியை சுத்தம் செய்து ஒரு கிண்ணத்தில் போட்டு, சுடு தண்ணீர் சேர்த்து ஊறவிட வேண்டும்.
அதனையடுத்து பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தை தோல் உரித்து சுத்தம் செய்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் கழுவிய வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை சுத்தமாக தண்ணீரில் கழுவி பொடிப்பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் ஊற வைத்த புளியை நன்றாக கரைத்து தூசி இல்லாமல் வடித்து, கரைசலை தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து, காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிய விட்டு, பின் அதில் கருவேப்பில்லை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு அதனுடன் கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு மற்றும் பூண்டு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பூண்டு நன்றாக வதக்கியதும் வெங்காயம், மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறும் வரையி்ல், வதக்கி, அதில் கரைத்து வைத்த புளிக் கரைசலை சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்.
பின்னர், அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து, அதில் வெல்லம் சேர்த்து நன்றாக கரையும் வரை கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் பெருங்காயத்தூள் சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து இறக்கினால் அவ்வளவு தான், நாவூரும் சுவையில் புளி மிளகாய் சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPPCHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |