ஊரே மணமணக்கும் செட்டிநாடு மீன் குழம்பு! அதில் இதை மட்டும் சேர்க்காதீங்க..
பொதுவாக ஞாயிறு மற்றும் பண்டிகை தினங்கள் என்றாலே அசைவ உணவுகளுக்கு பஞ்சமே இருக்காது. அந்தளவு வகை வகையாக சமைத்து நம்மை அசத்தி விடுவார்கள்.
இதன்படி, மீன் கறிகள் வித விதமாக சமைப்பார்கள் அந்த கறிகள் இடத்தை பொருத்து வித்தியாசமாக இருக்கும். நமது முன்னோர்கள் சிக்கனை விட அதிகமாக மீன் உணவுகள் தான் கொடுப்பார்கள்.
இதற்கான காரணம் என்ன தெரியுமா? மீன்கள் அதிகம் எடுத்துக் கொண்டால் கண் பார்வை மற்றும் புரதம் குறைப்பாட்டால் ஏற்படும் நோய்கள் குறைவடையும் இது போன்ற நன்மைகளை தருகிறது.
அந்த வகையில் கம கம வாசணையுடன் செட்டிநாடு மீன் குழம்பு எப்படி எவ்வாறு செய்வது குறித்து தொடர்ந்து தெரிந்துக் கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
* மீன் - 1/2 கிலோ
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* புளிச்சாறு - 3 டேபிள் ஸ்பூன்
மசாலா தயாரிப்பதற்கான பொருட்கள்
*எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
*பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* பெரிய தக்காளி - 1 (நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1/2 கப்
மீன் குழம்பு தயாரிப்பு முறை
முதலில் குழம்பிற்கு தேவையான காய்கறிகள் மற்றும் மீன்கள் என்பவற்றை நன்றாக உப்பு மற்றும் மஞ்சள் போட்டு அலசிக் கொள்ள வேண்டும்.
பின்பு மண்சட்டியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி மசாலாவிற்கு தேவையான பொருட்கள் போட்டு பச்சை வாசம் போகும் வரை தாளித்துக் கொள்ள வேண்டும்.
இதனை தொடர்ந்து வதக்கிய வெங்காயத்துடன் அரைத்து வைத்த மசாலா பொடிகளை சேர்த்து ஒரு நிமிடம் கிளறிவிட்டு அதில் தேங்காய் துருவல் சேர்த்து மீண்டும் மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும்.
இது ஒரு புறம் இருக்கையில், மீண்டும் மண்ச்சட்டியில் எண்ணெய் ஊற்றி, கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் வெந்தயம் போட்டு தாளிக்க வேண்டும். இதனுடன் வெங்காயம் மற்றும் கறிவேப்பிலைகளை சேர்த்துக் கொள்ளவும்.
வதங்கிய பின்னர் அதில் மசாலா சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கி எடுத்து, புளி சார் மற்றும் தக்காளி போன்ற பொருட்களை மெது மெதுவாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இறுதியாக தேவையானளவு தண்ணீர் சேர்த்து மீன் தூண்டுகளை இட்டு குறைவான தீயில் வைத்து 10 நிமிடம் வேக வைத்து இறக்கி, அதில் மேலோட்டமாக கொத்தமல்லி தூவினால் ஆவலுடன் எதிர் பார்த்த செட்டிநாடு மீன் குழம்பு தயார்!!