காலிஃப்ளவர் கறி இப்படி ஒருமுறை செய்து பாருங்க! போட்டி போட்டு சாப்பிடுவாங்க
அசைவ குழம்பு சுவையில் காலிஃப்ளவர் குழம்பு எப்படி வைக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பெரும்பாலான சைவ பிரியர்கள் மட்டுமின்றி அசைவ பிரியர்களுக்கும் காலிஃப்ளவர் என்றால் அதிகமாகவே பிடிக்கும். அதிலும் சற்று வித்தியாசமான முறையில் சமைத்து சாப்பிடலாம்.
நீங்கள் காலிஃப்ளவரை தேங்காய்ப்பால் சேர்த்து வைக்கும் கறி சாதம் மட்டுமின்றி, சப்பாத்தி மற்றும் பூரி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் காலிஃப்ளவர் தேங்காய் பால் கறி எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
காலிஃப்ளவர் - 1 (நறுக்கியது)
தேங்காய் பால் - 200 மி.லி
குடைமிளகாய் - 1 ( பச்சை நிறம்)
கடலை மாவு - 1 ஸ்பூன்
மல்லி தூள் - 1 ஸ்பூன்
தயிர் - 1 கப்
சீரகம் - 1/2 ஸ்பூன்
கிராம்பு - 3
பட்டை - 1
இஞ்சி - 1 (துருவியது)
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, தேங்காய் பால், இஞ்சி, மல்லித் தூள், மிளகாய் தூள் மற்றும் தேவையான உப்பு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும்.
அதில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கவும். சூடான நீரில் உப்பு கலந்து அதில் நறுக்கிய காலிஃப்ளவரை போட்டு சிறிது நேரம் ஊறவைத்து தனியாக பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை கிராம்பு சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
பின்பு அதில் நறுக்கி வைத்த குடைமிளகாய் மற்றும் காலிஃப்ளவரை சேர்த்து வதக்கவும். சிறிது வெந்ததும் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த தேங்காய் பால் கலவையை ஊற்றி அதில் பச்சை வாசனை போகும் வரை நன்றாக கொதிக்க வைக்கவும்.
அவ்வளவு தான் அட்டகாசமான சுவையில் காலிஃப்ளவர் தேங்காய் பால் கறி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |