bread bajji : மொறுப்பான சுவையில் அசத்தல் பிரெட் பஜ்ஜி... எப்படி செய்வது?
ஈவ்னிங் நேரத்தில் விளையாடிவிட்டு வரும் குழந்தைகளின் பசியை போக்கும் ஒரு அருமையான ஸ்நாக்ஸ் தான் பிரட் பஜ்ஜி.
வீட்டில் மீதியாக இருக்கும் பிரெட் வைத்து ஒரு அருமையான ஈவ்னிங் ஸ்நாக்ஸ் மிகவும் எளிமையாக எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பிரெட் துண்டுகள்
கடலை மாவு
அரிசி மாவு
இஞ்சி பூண்டு விழுது
சிவப்பு மிளகாய் தூள்
சமையல் சோடா
எண்ணெய்
செய்முறை
கடலை ஹமாவு மற்றும் அரிசி மாவை தேவையான அளவுக்கு சமனாகஅளந்து எடுத்து ஒரு அகலமான கலவை கிண்ணத்திற்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து காரத்திற்கு ஏற்ப சிவப்பு மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து, சமமாக கலக்க நன்றாக கிளறிக்கொள்ள வேண்டும்.
பின்னர் சிறிது சிறிதாக தண்ணீரைச் சேர்த்து, தோசை மாவை விட சற்று தடிமனாக பதத்துக்கு அந்த கலவையை தயார் செய்துக்கொள்ள வேண்டும்.
இந்த கலவையில் சிறிய நுரை குமிழ்கள் வரும் வரையில் அப்படியே விட்டுவிட வேண்டும். இதற்கிடையில் பிரெட் துண்டுகளை முக்கோண வடிவில் இரண்டாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெயைச் சூடாக்கி, ஒவ்வொரு முக்கோண பிரெட் துண்டையும் இருபுறமும் நன்கு மூழ்கும் வகையில் அந்த கலவையில் பிரட்டி பொன்னிறமாக பொரித்து எடுத்தால், அவ்வளவு தான் மொறு மொறு சுவையில் அசத்தல் பிரெட் பக்கோடா தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
