கர்ப்பமான பிறகுதான் திருமணம் செய்வேன்: சர்ச்சையைக் கிளப்பிய டாப்ஸியின் பதில்
நான் இன்னும் கர்ப்பம் ஆகவில்லை அதனால் இப்போதைக்கு திருமணம் இல்லை என சர்ச்சையை கிளப்பும் வகையில் பதிலளித்திருக்கிறார் நடிகை டாப்ஸி பன்னு.
நடிகை டாப்ஸி
தமிழ் சினிமாவில் ஆடுகளம் திரைப்படம் மூலம் தனுஸிற்கு ஜோடியாக நடித்து அறிமுகமானவர் தான் டாப்ஸி. முதல் படத்திலேயே அவருக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைந்தது.
அதனைத் தொடர்ந்து அந்த படத்தை தொடர்ந்து, வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா ஆகிய சில தமிழ் படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.
அதன்பிறகு தெலுங்கு மற்றும் பொலிவூட் திரையில் கவனம் செலுத்தத் தொடங்கினார். பின்னர் தமிழ் மட்டுமில்லாமல் பிற மொழி படங்களிலும் நடித்துள்ள இவரின் கைவசம் பல படங்களில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார்.
இன்னும் கர்ப்பமாகவில்லை
இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் ரசிகர் ஒருவர் எப்போது திருமணம் செய்துக் கொள்ளப் போகிறீர்கள் என்றுக் கேட்டதற்கும் டாப்ஸி கொடுத்த பதில் சர்ச்சையைக் கிளப்பி வைரலாகி வருகிறது.
அப்படி என்ன பதில் சொல்லியிருக்கிறார் என்றுப் பார்த்தால் 'நான் இன்னும் கர்ப்பம் ஆகவில்லை அதனால் இப்போதைக்கு திருமணத்திற்கும் வாய்ப்பில்லை' எனத் தெரிவித்திருக்கிறார்.
இவரின் பதிலைக் கேட்ட ரசிகர்கள் கர்ப்பமான பிறகு தான் திருமணம் செய்துக் கொள்வார் போல எனவும் இந்த பதிலில் ஏதோ உள்குத்து இருப்பதாகவும் ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |