திருமணம் எப்போது என கேட்ட ரசிகர்: ஸ்ருதிஹாசனின் தடாலடி பதில்
எப்போது திருமணம் என்ற ரசிகரின் கேள்விக்கு நடிகை ஸ்ருதி ஹாசன் தடாலடியாக பதில் அளித்துள்ளார்.
நடிகர் கமல் ஹாசனின் மூத்த மகள் நடிகை ஸ்ருதிஹாசன். குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்கு அறிமுகமான இவர், இசையமைப்பாளர், பின்னணி பாடகர் என பல முகங்களை கொண்டுள்ளார்.
தற்போது பிஸியான நடிகையாக வலம் வரும் இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக, அவ்வப்போது தனது போட்டோக்களையும், வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார்.
அவர் படு கிளாமராக வெளியிடும் போட்டோக்களும் வீடியோக்களும் இணையத்தில் அவ்வப்போது வைரலாகி வருகிறது. நடிகை ஸ்ருதி ஹாசன் அவ்வப்போது காதல் சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்.
முன்பு லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்சேலை என்ற நாடக கலைஞரை காதலித்து வந்தார் நடிகை ஸ்ருதி ஹாசன். ஆனால் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக 2019ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர்.
இதனை தொடர்ந்து மீண்டும் தற்போது சாந்தனு என்பவரை காதலித்து வருகிறார். இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களும் வீடியோக்களும் அடிக்கடி சமூக வலைதள பக்கத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்நிலையில், நேற்று ஆஸ்க் மீ எனித்திங் என்ற செஷனில் ரசிகர்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சந்தித்தார். அப்போது ரசிகர் ஒருவர் எப்போது திருமணம் செய்து கொள்ள போகிறீர்கள் என்று கேட்டார்.
அதற்கு தடாலடியாக பதில் அளித்துள்ளார் ஸ்ருதி ஹாசன். "நான் முற்றிலும் நேர்மையாக இருக்கப் போகிறேன் என்று நினைக்கவில்லை. மேலும் இதிலிருந்து நாம் முன்னேற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன்.
இது 2021.. இப்போது உலகில் அதிக அழுத்தமான பல பிரச்சனைகள் உள்ளன. பல எரியும் கேள்விகள் உள்ளன. எனவே, அமைதி." இவ்வாறு வீடியோவில் ரசிகருக்கு பதில் அளித்துள்ளார்.