சிக்ஸ் பேக் உடலுடன் இளம் நடிகர்களுக்கு சவால் விடும் நடிகை!
இளம் நடிகர்களுக்கு போட்டியாக சிக்ஸ் பேக் உடலுடன் டாப்ஸி வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்டவர் நடிகை டாப்ஸி, தமிழில் ஆடுகளம் படம் மூலம் அறிமுகமானார்.
தொடர்ந்து தெலுங்கு உட்பட தென்னிந்திய மொழிகளில் நடித்திருந்தாலும் தற்போது பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
தான் நினைத்ததை பட்டென பேசக்கூடியவர் டாப்ஸி, இதனால் சர்ச்சைகளிலும் மாட்டிக்கொள்வார்.
சமீபத்தில் கூட பேஷன் ஷோவொன்றில் கடவுள் லக்ஷ்மி உருவத்துடன் கூடிய நகை அணிந்து வந்திருந்தது பரபரப்பை கிளப்பியது.
தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் கவனம் செலுத்தி வரும் டாப்ஸி, அனுராக் காஷ்யப் இயக்கத்தில் உருவாகும் டோபாரோ என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் உடற்பயிற்சிகளில் அதிக ஆர்வம் கொண்ட டாப்ஸி, சிக்ஸ் பேக் வைத்துக் கொண்ட புகைப்படம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.