கவர்ச்சி உடையில் வலம் வந்த டாப்ஸி: இந்து கடவுள்களை அவமதித்த குற்றத்திற்காக பொலிஸில் புகார்!
கவர்ச்சியான உடையில், இந்து கடவுள்கள் கொண்ட நெக்லஸ் அணிந்து கடவுள்களை அவமதித்ததாக நடிகை டாப்ஸி மீது பொலிஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகை டாப்ஸி
தமிழ் சினிமாவில் ஆடுகளம் திரைப்படம் மூலம் தனுஸிற்கு ஜோடியாக நடித்து அறிமுகமானவர் தான் டாப்ஸி. முதல் படத்திலேயே அவருக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைந்தது.
அதனைத் தொடர்ந்து அந்த படத்தை தொடர்ந்து, வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா ஆகிய சில தமிழ் படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.
அதன்பிறகு தெலுங்கு மற்றும் பொலிவூட் திரையில் கவனம் செலுத்தத் தொடங்கினார். பின்னர் தமிழ் மட்டுமில்லாமல் பிற மொழி படங்களிலும் நடித்துள்ள இவரின் கைவசம் பல படங்களில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்துக்கடவுளை அவமதித்தார்
இந்நிலையில் உச்சக்கட்ட கவர்ச்சி உடை அணிந்து பேஷன் ஷோவில் ரேம்ப் வாக் வந்தபோது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரல் ஆகி வருகின்றது.
அந்தப் புகைப்படத்தில் அவர் கழுத்தில் நெக்லஸ் ஒன்றை அணிந்திருந்தார். அந்த ஆபரணத்தில் மகாலட்சுமி மற்றும் அம்மன் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது.
இப்படி கவர்ச்சி உடை அணிந்துக் கொண்டு கடவுளை அவமதிப்பது ஏற்றுக் கொள்ளமுடியாது என வலது சாரிகள் எதிர்ப்பு தெரிவித்து பொலிஸிலும் புகாரளித்துள்ளனர்.