எதிர்ப்புகளுக்கு மத்தியில் தன்சானியா வரை ரீச்சான விஜய் பட பாடல்..! குத்தாட்டதுடன் கிளம்பிய வைப்
தன்சானியாவை சேர்ந்த பிரபல யூடியூப்பர்களின் குத்தாட்டம் போடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தன்சானியா பழங்குடியினர்
தமிழ் சினிமாவில் இளைய தளபதியாக வாழ்ந்து வருபவர் தான் நடிகர் விஜய்.
இவர் நடிப்பில் கடைசியாக வாரிசு திரைப்படம் வெளியானது.
இதன் பின்னர் லியோ திரைப்படம் திரைக்கு வர தயாராக உள்ளது. இந்த நிலையில் லியோ படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
இந்த பாடல் வெளியாகிய பின்னர் பல சர்ச்சையான கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
விஜய் படத்தில் வெளியான முதல் பாடலில் அவர் வாயில் சிக்ரட் வைத்து கொண்டு ஆடியிருப்பார். இந்த செயல் விஜயின் குட்டி ரசிகர்கள் மத்தியில் பெரிதாக எடுப்படவில்லை.
ஆனாலும் மக்கள் மத்தியில் நல்ல ரீச்சை பெற்றுள்ளது. அந்த வகையில் தன்சானியாவில் பிரபல யூடியூப்பர் இருவர் லியோ பாடலுக்கு விஜய் போல் நடனம் ஆடியுள்ளார்கள்.
இந்த காட்சி விஜய் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. அத்துடன் இதனை பார்த்த இணையவாசிகள், “ தளபதி பாடல் என்றால் சும்மாவா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.