டூர் சென்று மாட்டியதை பச்சையாக சமாளித்த வாரிசு பட நடிகை! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்
விஜய் தேவர் கொண்டாவுடன் டூர் சென்றால் என்ன தவறு என கோவத்தில் ராஸ்மிகா மந்தனா கொந்தளித்துள்ளார்.
சினிமா பயணம்
தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளின் ஒருவரான ராஷ்மிகா மந்தனா, சமிபத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து மக்கள் மத்தியில் அவருக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.
இவர் முதல் முதலில் தமிழ் சினிமாவிற்கு கார்த்தி நடிப்பில் வெளியான “சுல்தான்” என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இவரின் யதார்த்தமான நடிப்பால் இளைய தளபதியுடன் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்.
இதனை தொடர்ந்து இவர் தெலுங்கில் விஜய் தேவர் கொண்டாவுடன் இணைந்து “கீதாகோவிந்தம்” நடித்துள்ளார். இந்த திரைப்படத்திலிருந்து காதல் வயமடைந்தாக பல சர்ச்சைகளை சிக்கி வருகிறார்கள்.
இது குறித்து இருவரிடமும் கேள்விகள் எழுப்பட்டு வந்த நிலையில், இதற்கு இருதரப்பினரும் எதிர்ப்பு தெரிிவித்துள்ளார்கள். மேலும் இதனை கவனித்த ராஷ்மிகா 'இது ஒரு கியூட் வதந்தி' எனவும் பதலளித்துள்ளார்.
டூர் சென்று மாட்டிய பிரபலங்கள்
இந்நிலையில் சமிபத்தில் இருவரும் வெளிநாட்டிற்கு டூர் சென்று விட்டு புகைப்படத்தை பகிர்ந்து மாட்டிக் கொண்டார்கள்.
இதனை கண்டு பிடித்த ரசிகர்கள், இருவரையும் பல செய்திகள் போட்டு வைரலாக்கி வருந்த நிலையில், இது குறித்து வாரிசு திரைபப்பட பேட்டியிலும் கேட்டுள்ளார்கள். இதற்கு பதிலளித்த, ராஷ்மிகா “அவர் எனது நண்பர். அவருடன் டூர் சென்றால் என்ன தவறு” என ஆவேசமாகப் பேசியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இவரின் கருத்துக்கள் வரவர திமிராகவுள்ளதாக நெட்டிசன்கள் கொந்தளித்து வருகிறார்கள்.