தந்தூரி பிரியரா நீங்கள்? புற்றுநோய் அபாயம்... எச்சரிக்கை தகவல்
தந்தூரி, பார்பிக்யூ மற்றும் கிரில்லட் இறைச்சி வகைகளை உட்கொள்ள எம்மில் பாலருக்கு ஆசை இருக்கும், எனினும் இதில் நிறைந்திருக்கும் ஆபத்து பற்றி நீங்கள் அறிவீர்களா?
டீப் ப்ரை செய்யப்படும் உணவு வகைகளை விடவும் நெருப்பினால் சுடப்படும் உணவு வகைகள் ஆரோக்கியமானது என்றே இதுவரை காலமும் கருதப்பட்டது.
இந்த வகை சமையலில் அதிகளவு கொழுப்புச் சத்து இருக்காது எனவும், உணவு வகைகளின் ஊட்டச் சத்துக்கள் செறிந்திருக்கும் என கூறப்பட்டது.
சமையல் எண்ணெய் சூடாக்கப்படும் போது ஏற்படக்கூடிய பாதக இரசாயனக் கலவையும் இதில் கிடையாது என தெரிவிக்கப்பட்டது.
எனினும், தந்தூரி சிக்கன் உள்ளிட்ட சுடப்பட்ட இறைச்சி வகைகளில் புற்று நோய் ஏற்படுத்தும் ஆபத்துக்கள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறு புற்றுநோய் ஏற்படுகின்றது?
இறைச்சி வகைகளை திறந்த வெளியில் நெருப்பில் சுடும் போது புற்று நோயை ஏற்படுத்தக் கூடிய பொருட்கள் இறைச்சியின் மேல் பகுதியில் படிவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பாடி பில்டர்கள் தங்களது தசைகளை வலுப்படுத்திக் கொள்வதற்காக creatine என்ற இயற்கை அமிலம் பயன்படுகின்றது.
எனினும் இந்த வேதிப்பொருள் நீண்ட நேரம் நெருப்பில் சுடப்படும் போது புற்றுநோய் ஏற்படுத்தும் வேதிப்பொருளாக மாற்றமடைகின்றது.
கொழுப்பினை எரிக்கும் போது அதிலிருந்து உருவாகும் polycyclic aromatic hydrocarbons என்ற பொருளும் உடல் நலனுக்கு தீங்கிழைக்கக் கூடியது என தெரிவிக்கப்படுகின்றது.
சுடப்பட்ட இறைச்சி வகைகளை உட்கொள்வதனால் கணைய புற்றுநோய் ( pancreatic cancer) ஏற்படுவதாக மின்னிசோட்டா பல்கலைக்கழக ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் கடந்த 2019ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின் போது சுமார் 89248 பேர் கணைய புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
புற்றுநோயை எவ்வாறு தவிர்ப்பது?
பச்சையாக இறைச்சியை உடன் சுட்டு சாப்பிடாது, அவற்றை மசலாவுடன் குறைந்தபட்சம் அரை மணித்தியாலம் ஊறவிட்டு சுட்டால் பாதிப்பு குறைவு.
டாக்சின்களை அகற்றக்கூடிய மூலிகைப் பொருட்களைக் கொண்டு இறைச்சியை ஊற விடலாம்.
இறைச்சியை நேரடியாக சுடாது பழங்கள் மரக்கறி வகைகளை இட்டு அதன் நடுவில் இறைச்சியை சுடலாம்.
ஒவ்வொரு முறையும் பயன்படுத்த முன்னதாக கிரில்லை நன்றாக சுத்தம் செய்யவும்.
இதன் ஊடாக ஏற்கனவே எஞ்சிய இறைச்சி துண்டுகள் கலப்பதனால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை தவிர்க்கலாம்.
இறைச்சியை சுடும் போது அப்படியே விட்டு விடாது அடிக்கடி அவற்றை திருப்பி போடவும். இதன் மூலம் மிதமிஞ்சிய அளவில் இறைச்சியில் சூடு படுவதனை தவிர்க்க முடியும்.
இறைச்சியை கிரில் செய்ய முன்னதாக அவற்றை சிறிது நேரம் மைக்ரோவேவில் சமைத்துக்கொள்ள முடியும்.
இதன் ஊடாக அதிகளவு நேரம் இறைச்சி வேக வைக்கப்படாது.
பெரிய இறைச்சி துண்டுகளை சுடுவதனை விடவும் சிறிய துண்டுகளாக வெட்டி சுடுவதன் மூலமும் அதிகளவு நேரம் இறைச்சி தீயில் சுடப்படுவதனை தவிர்க்கலாம்.