35 வயதை எட்டிய தாமிரபரணி பட நடிகை! இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க
நடிகர் விஷால் நடிப்பில் வெளியான தாமிரபரணி திரைப்படத்தின் மூலம் பானுவாக பலருக்கும் பரிச்சயமான நடிகை முத்தா நீண்ட இடைவெளிக்கு பின்னர் பட்டு புடவையில் அசத்தல் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.
நடிகை முத்தா
தமிழில் தாமிரபரணி என்ற திரைப்படத்தின் மூலமாக பானுவாக அறிமுகமானவர் தான் நடிகை முத்தா.கேரளாவை சேர்ந்த இவரின் இயற்பெயர் எல்ஜா ஜார்ஜ்.

மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் மாத்திரமே நடித்திருந்தாலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டவர் முக்தா. முக்தா என்பது திரைத்துறைக்கு வந்த பின்னர் இவருக்கு சூட்டப்பட்ட பெயராகும்.
கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான ஒரு மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது கலை பயணத்தை தொடங்கினார்.

அதன் பிறகு கடந்த 2007 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில், விஷால் நடிப்பில் வெளியான "தாமிரபரணி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் இவர் கால்பதித்தார்.
அதன் பிறகு இவர் தொடர்ச்சியாக தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்தாலும் இவருக்கு மீண்டும் ஒரு நல்ல வரவேற்பை கொடுத்த திரைப்படம் என்றால் அது கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ஆர்யா மற்றும் சந்தானத்தின் "வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க" என்கின்ற திரைப்படம் தான்.

இறுதியாக தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான "சகுந்தலாவின் காதலன்" என்கின்ற திரைப்படத்தில் நடித்த நடிகை மும்தா அதன்பிறகு பெரிய அளவில் எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை.
கடந்த 2015 ஆம் ஆண்டு ரிங்கு டோமி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது குடும்ப வாழ்க்கையை சந்தோஷமாக கழித்து வருகிறார்.

மலையாள மொழிகளில் அவ்வப்போது திரைப்படங்களில் நடித்து வரும் முத்தாவிற்கு ஒரு அழகிய மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தனது 35 ஆவது பிறந்தநாளில் பட்டு புடவையில் அசத்தல் போஸ் கொடுத்து நடிகை முக்தா தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |