இது போதுமா..? பெண்ணை பெற்ற அம்மாவின் வரதட்சணை பட்டியல்! வாயடைத்துப்போன தொகுப்பாளர்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வாரம் தோறும் ஒளிப்பரப்பாகி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் இந்த வாரம் திருமணத்தில் யார் கை ஓங்கி இருக்கிறது? மணமகன் வீட்டார் Vs மணமகள் வீட்டார் என்ற தலைப்பில் சுவாரஸ்யமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அதில் மணமகள் வீட்டார் சார்ப்பில் பங்கேற்ற பெண்ணை பெற்ற தாய் ஒருவர் மகளை மருத்துவம் படிக்க வைத்திருப்பதாகவும், இவருக்கு பார்க்கும் மாப்பிள்ளையும் மருத்துவராக இருக்க வேண்டும்,சொந்த வீடு வேண்டும், கார் வேண்டும், சொந்தமாக மருத்துவமனை கட்டும் அளவுக்கு வங்கியில் சேமிப்பு இருக்க வேண்டும் என பட்டியலை அடிக்கிக்கொண்டே போன காட்சியடங்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழா தமிழா
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தமிழா தமிழா மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைபெற்று வெற்றி நடைபோட்டு வரும் ஒரு நிகழ்ச்சியாக திகழ்கின்றது.
பிரபல தொகுப்பாளர் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கென ஒரு தனித்துவமாக ரசிகர் படையே இருக்கின்றது. இந்நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு பரபரப்பான விவாதம் அல்லது சுவாரஸ்யமான கலந்துரையாடல் வாரம் தோறும் நடைபெற்று வருகின்றது.

அந்தவயைில், இந்த வாரம், திருமணத்தில் யார் கை ஓங்கி இருக்கிறது? மணமகன் வீட்டார் Vs மணமகள் வீட்டார் என்ற தலைப்பில் சுவாரஸ்யமான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. அதன் சில காட்சிகள் அடங்கிய காணொளி தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |