Tamizha Tamizha: அரங்கத்தில் ஜானகி அம்மாவாக மாறிய பெண்... பிரமிப்பில் திகைத்த தொகுப்பாளர்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் இந்த வாரம் பிரபல பின்னணி பாடகர்கள் போல் பாடுபவர்கள் மற்றும் அவர்களது ரசிகர்கள் என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.

இந்த வாரத்தில் பிரபல பின்னணி பாடகர்கள் போல் பாடுபவர்கள் மற்றும் அவர்களது ரசிகர்கள் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
இதில் பாடல் பாடுபவர்கள் பாடும் பாடலைக் கேட்டு அதனை ரசிப்பவர்கள் பிரமிப்பில் ஆழ்ந்துள்ளனர். இளையராஜா, எஸ்பிபி, ஜானகி அம்மா என அனைத்து முன்னணி பாடகர்களையும் அரங்கத்தில் கொண்டு வந்துள்ளனர்.
முக்கியமான விடயம் என்னவெனில் பெண் ஒருவர் ஜானகி அம்மாவைப் போன்று குழந்தை குரலில் பாடி அரங்கத்தையே அசத்தியுள்ளார். இவரது குரலைக் கேட்ட தொகுப்பாளர் உட்பட அனைவரும் வாயடைத்துப் போயுள்ளனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |