Bigg Boss: சிறை கைதிக்கு இதுவரை கொடுக்காத தண்டனை! பிக்பாஸ் கொடுத்த அதிரடி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் சரியாக விளையாடாத நபர்களாக எப்ஃஜே மற்றும் வினோத் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
பிக் பாஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடைபெற்ற பள்ளிக்கூட டாஸ்கில் போட்டியாளர்கள் பலரும் மாணவ மாணவியராக மாறி விளையாடினர்.
இதில் வார்டனாக பாரு இருந்து வந்தார். ஆனால் மாணவர்கள் பாருவின் வேலைக்கு எந்தவொரு ஸ்டாரும் கொடுக்கப்படவில்லை. அதற்கு மாறாக பிரஜன், அமித், டீச்சராக வந்த கனிக்கு ஸ்டார் கொடுத்து கௌரவப்படுத்தினர்.

இந்நிலையில் இந்த டாஸ்க்கை ஒழுங்காக விளையாட நபர்களை தற்போது தெரிவு செய்துள்ளனர். இதில் எப்ஃஜே மற்றும் வினோத் இருவரையும் சக போட்டியாளர்கள் தெரிவு செய்து சிறைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதில் வினோத் கம்ருதினிடம் வியானாவை விடவா நான் சரியாக விளையாடவில்லை என்று ஆதங்கத்தில் கேட்டுள்ளார். அதற்கு கம்ருதின் ஆமா என்பது போன்று பதிலளித்துள்ளார்.
தற்போது சிறைக்கு சென்றுள்ள போட்டியாளர்கள் பிக் பாஸ் புதிய தண்டனை ஒன்று கொடுத்துள்ளது. அது என்னவெனில் இருவருக்கும் வெவ்வேறு கலரில் பாசி கொடுக்கப்பட்டு, அதனை மாறி மாறி கோர்க்க வேண்டுமாம்.
இவ்வாறு கோர்த்து 200 மாலைகள் தயார் செய்ய வேண்டும் என்ற டார்கெட்டையும் பிக் பாஸ் வைத்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |