நடுவீட்டில் பெண்ணின் புடவையை அவிழ்ந்து அரங்கேறிய கொடூரம்! கணவரிடம் தொகுப்பாளர் கேட்ட கேள்வி
தமிழா தமிழா நிகழ்ச்சியில் விவாகரத்து மனநிலை வரை சென்று மீண்டும் சேர்ந்து வாழும் தம்பதிகள் என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.

இந்த வாரத்தில் விவாகரத்து மனநிலை வரை சென்று மீண்டும் சேர்ந்து வாழும் தம்பதிகள் என்ற தலைப்பில் பல உண்மையை அரங்கத்தில் கூறியுள்ளனர்.
இதில் பெண் ஒருவர் ஜாதி மாறி திருமணம் செய்துள்ளதால் தனது கணவர் வீட்டில் அவர்கள் செல்லும் கோவிலுக்கு கூட தன்னை அழைத்து செல்வதில்லை என்று ஆதங்கத்தை கொட்டியுள்ளார்.
மற்றொரு பெண் கூறிய விடயம் மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. அதாவது பெண் கட்டியிருந்த புடவை பிடிக்காததால் அவரது அண்ணி நடுவீட்டில் வைத்து புடவையை கழற்றியுள்ளார். இதனை கணவரும் இதுநாள் வரையிலும் கேட்கவில்லையாம்.
இதனைக் கேட்ட தொகுப்பாளர் கோபத்தில் உச்சத்தில் குறித்த நபரை சரமாரியாக கேள்வி எழுப்பி சத்தம் போட்டுள்ளார்..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |