Tamizha Tamizha: கணவரை முகம்சுழிக்கும் வார்த்தையில் அழைக்கும் மனைவி! வாயடைத்துப் போன தொகுப்பாளர்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் கணவனே கண்கண்ட தெய்வம் மற்றும் மனைவி சொல்லே மந்திரம் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்படுகின்றது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
இந்த வாரத்தில் கணவனே கண்கண்ட தெய்வம் மற்றும் மனைவி சொல்லே மந்திரம் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
இதில் கணவரை சாமர்த்தியமான மனைவி ஒருவர் வேலை வாங்குவதை கூறினார். சில பெண்கள் தங்கள் கணவரை அழைக்கும் விதத்தினை கூறியுள்ளனர்.
ஆனால் ஒரு பெண் மட்டும் தன்னையே மறந்து அரங்கத்தில் பேசியுள்ளார். அதாவது மோசமான வார்த்தையால் அழைப்பதை அரங்கத்தில் கூறி அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |