யோசனையில் இருக்கும் இந்த குழந்தை எந்த நடிகை தெரியுமா? ஆச்சரியப்படுவீங்க
நடிகை கார்த்திகா நாயரின் சிறுவயது புகைப்படம் வைரலாகி வருகின்றது.
கார்த்திகா நாயர்
80களில் தமிழில் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் இணைந்து படங்கள் நடித்து டாப் நாயகியாக வலம் வந்ததுடன், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் படங்களில் கலக்கியவர் தான் நடிகை ராதா.
பிரபல நடிகை ராதாவின் மகள் கார்த்திகா நாயர். இவர் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான கோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.
பின்பு சினிமாவில் அவ்வளவாக வாய்ப்பு இல்லாமல் தனது தொழிலில் கவனம் செலுத்தி வந்தார். கடந்த 2015ம் ஆண்டு வெளியான புறம்போக்கு என்ற பொதுவுடைமை அவரது கடைசி படமாக அமைந்தது.
இந்நிலையில் ரோஹித் மேனன் என்பவரைக் கடந்த மாதம் 19ம் தேதி திருவனந்தபுரத்தில் திருமணம் செய்து கொண்டார்.
இவரது சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |