Tamizha Tamizha: ஈகோவால் வார்த்தைகளை கொட்டும் காதலன்.. கம்ப்ளைன்ட்டை அடுக்கிய காதலி
காதலி- காதலன் இருவருக்குள் இருக்கும் ஈகோ பிரச்சினையால் என்னென்ன விடயங்கள் இல்லாமல் போகிறது என இந்த வாரம் தமிழா தமிழாவில் பேசப்பட்டுள்ளது.
தமிழா தமிழா
தற்போது பிரபல தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றன.
அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு தொலைக்காட்சியிலும் விவாத நிகழ்ச்சியாக தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.
இந்த நிகழ்ச்சியை அறிவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.

காதலனை கைக் காட்டிய பெண்
இந்த நிலையில், இந்த வாரம் இந்த தலைமுறையில் காதலிக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் இருதரப்பினரில் யார் காதலை புரிந்து கொண்டு நடந்து கொள்கிறார்கள் என்ற தலைப்பில் வாதங்கள் ஆரம்பமாகியுள்ளது.
அதில் பேசிய இளைஞர், “பெண்கள் தவறு செய்தாலும் காதலுக்குள் பிரச்சினைகள் வரக்கூடாது என நாங்களே ஒவ்வொரு தடவையும் விட்டுக் கொடுத்து போகிறோம்...” என பேசினார்.

அதற்கு பதில் கொடுத்த பெண், “ஆண்கள் நன்றாக இருப்பார்கள். அவர்களுடைய ஈகோவை தொடும் வகையில் பேசி விட்டால் அவர்களின் உண்மையான முகம் வெளியில் வரும்..” என பேசினார். இப்படியாக இரு தரப்பினரும் தங்கள் பக்கம் இருக்கும் நியாயங்களை குறிப்புகளாக எடுத்து வைக்கிறார்.
இப்படியாக இந்த வார எபிசோட் காணொளி வைரலாக்கப்பட்டு வருகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |