Tamizha Tamizha: கைகள் இல்லாமல் ட்ரம்ஸ் வாசித்து அசத்திய இளைஞர்... வாயடைத்துப் போன அரங்கம்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் கைகள் இல்லாத இளைஞர் ஒருவர் அட்டகாசமாக ட்ரம்ஸ் அடித்து அசத்தியுள்ள காட்சி அரங்கத்தையே அதகளப்படுத்தியுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.

இந்நிகழ்ச்சியில் கடந்த ஞாயிறு கிழமை குடும்பத்தின் சூழ்நிலையை மாற்ற உழைக்கும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் குடும்பத்தினர் என்ற தலைப்பில் விவாதம் நடத்தப்பட்டது.
இதில் கைகள் இல்லாத இளைஞரை இந்த சமூகம் எவ்வாறு பேசி கஷ்டப்படுத்தியுள்ளது என்றும் அவரது மனைவி இதனால் எவ்வளவு பிரச்சனைகளை சந்தித்துள்ளார் என்பதும் வெளியானது.
ஒரு கட்டத்தில் தனது கணவரின் திறமையை அரங்கத்தில் கூறினார் மனைவி. தனது கணவர் கைகள் இல்லாமல் ட்ரம்ஸ் வாசிப்பவர் என்று தெரிவித்தார்.
அரங்கத்தில் அனைவர் முன்பும் ட்ரம்ஸ் வாசித்து அசத்தியும் உள்ளார். இதனை தொகுப்பாளர் உட்பட அனைவரும் வியப்பில் அவதானித்துள்ளனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |