Singappenne: ரகுவை நேருக்கு நேர் சந்தித்த ஆனந்தி... சூடுபிடிக்கும் கதைக்களம்
சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி ரகுவை நேரடியாக மருத்துவமனையில் சந்தித்துள்ள சம்பவம் ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
சிங்கப்பெண்ணே
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் அன்பு ஆனந்தி திருமணம் நடந்து முடிந்துள்ளது.
ஆனால் அன்புவை ஆனந்தி ஏற்றுக்கொள்ளாத நிலையில், ஆனந்தியின் அக்கா கணவருடன் அன்பு தங்கியுள்ளார்.
இந்நிலையில் அன்புவை சமாதானப்படுத்தி அவரது வீட்டிற்கு அனுப்ப தனது அக்காவுடன் வந்த ஆனந்தி அங்கேயே தங்கினார்.

பின்பு தனது ஹாஸ்டலுக்கு கிளம்ப தயாரான நிலையில், அன்புவிற்கு காய்ச்சல் அதிகமாக இருந்ததால் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார்.
அங்கு ரகுவை அழைத்துக் கொண்டு மேனேஜர் வந்துள்ள நிலையில், தற்போது ரகுவை ஆனந்தி எதிரெதிரே சந்தித்துள்ளார்.
தற்போது ஆனந்தி ரகுவை தப்பிக்க விடாமல் பிடித்துக்கொள்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. உண்மை எப்பொழுது வெளிச்சத்திற்கு வரும் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |