Tamizha Tamizha: தல பொங்கலுக்கு 4 நாட்கள் தூக்கமா? இளைஞருக்கு தொகுப்பாளர் கொடுத்த பதில் என்ன?
தமிழா தமிழா நிகழ்ச்சியில் தல பொங்கலை கொண்டாடும் தம்பதிகள் மற்றும் 25 வருட தல பொங்கலை கடந்த தம்பதிகள் என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
இந்த வாரத்தில் தல பொங்கலை கொண்டாடும் தம்பதிகள் மற்றும் 25 வருட தல பொங்கலை கடந்த தம்பதிகள் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
இதில் 25 ஆண்டுகள் பொங்கல் கொண்டாடிய தம்பதி ஒருவர் ஸ்பெஷல் சாப்பாடு ஒன்றினை செய்து வந்துள்ளார். இதனை சாப்பிட்ட புதுமண தம்பதிகள் வியப்பில் காணப்படுகின்றனர்.
அதில் ஒருவர் தான் பொங்கலுக்கு 4 நாட்கள் நன்றாக தூங்க வேண்டும் என்று கூறினார். ஆனால் அந்த தம்பதி கொண்டு வந்ததை சாப்பிட்ட பின்பு கிராமத்திற்கு சென்று பொங்கல் கொண்டாட வேண்டும் என்று முடிவு எடுத்துள்ளாராம்.
அவ்வளவு ருசியாக குறித்த தம்பதிகள் அந்த உணவை சமைத்து எடுத்து வந்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |