அவன் மனசுக்கு நிச்சயம் இது நடக்கும்... விஷால் நிலை குறித்து ஜெயம் ரவி நெகிழ்ச்சி
நடிகர் விஷால் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில் விஷாலின் நெருங்கிய நண்பரான நடிகர் ஜெயம் ரவி விஷால் உடைய உண்மையான நிலை என்ன என்பது குறித்து பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ள விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகர் விஷால்
கடந்த சில நாட்களாகவே விஷால் பற்றிய செய்திகள்கள் மற்றும் சர்சைகள் குறித்து இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகின்றது.
காரணம், சமீபத்தில் நடைபெற்ற ‘மதகஜராஜா’ படத்தின் விளம்பரப்படுத்துதல் நிகழ்ச்சியில் விஷால் கலந்துக்கொண்ட போது ,அவருக்கு ஏற்பட்ட கை நடுக்கம், கண் பார்வை பிரச்சினை உள்ளிட்ட அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு விஷால் ரசிகர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், காதலிக்க நேரமில்லை படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜெயம் ரவி விஷால் குறித்து பேசிய விடயம் தற்போது இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்து வருகின்றது.
ஜெயம் ரவி கருத்து
அதில் ஜெயம் ரவி பேசுகையில், அதில், "விஷாலை விட ஒரு தைரியசாலி யாரும் கிடையாது. அவன் இப்போது ஒரு மோசமான கட்டத்தில் இருக்கிறான்.
விரைவில் இதில் இருந்து மீண்டு வருவான், அதற்கு அவன் தைரியம் நிச்சயம் துணை புரியும்.
என் நண்பன் விஷாலின் நல்ல மனசுக்கும், அவனது குடும்பத்தினரின் நல்ல மனசுக்கும் கண்டிப்பாக அவன் விரைவில் சிங்கம் போல் மீண்டு வருவான்" என்று நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். குறித்த நெகிழ்ச்சி பதிவு தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW |