மாநிலத் திரைப்பட விருது - தந்தை மகள் தேர்வு... ரோபோ சங்கர் குடும்பத்தின் முதல் வெற்றி
தமிழ்நாடு அரசு 2016 முதல் 2022 வரையிலான மாநிலத் திரைப்பட விருதுகளை அறிவித்துள்ளது. இதில் மறைந்த நடிகர் ரோபோ சங்கர் மற்றும் அவரது மகள் தேர்ந்தெடுக்கபட்டுள்ளனர்.
ரோபோ சங்கர் மற்றும் இந்திரஜா
தமிழகத் திரையுலகின் மிக உயரிய கௌரவமாகக் கருதப்படும் மாநிலத் திரைப்பட விருதுகளை கொடுக்க தமிழ் நாட்டு அரசு சமீபத்தில் அறிவித்து இருந்தது.
2016 முதல் 2022 வரையிலான சிறந்த படங்கள் மற்றும் கலைஞர்களைக் கௌரவிக்கும் பட்டியலில், மறைந்த நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மற்றும் அவரது மகள் இந்திரஜா இருவரும் தேர்ந்தெடுக்கபட்டுள்ளனர்.
தந்தை மகள் இருவருக்கும் ஒரே பரிவில் விருதுகள் கிடைக்கபட்டுள்ளது. இது உண்மையில் தமிழ் சினிமாவின் சாதனை என்று தான் கூற வேண்டும்.
2022-ம் ஆண்டிற்கான சிறந்த நகைச்சுவை நடிகராக ரோபோ சங்கர் (படம்: இரவின் நிழல்) மற்றும் சிறந்த நகைச்சுவை நடிகையாக அவரது மகள் இந்திரஜா சங்கர் (விருமன்) போன்றவற்றிற்கு தேர்வு செய்யப்பட்டனர்.

விருது பெறும் முன்னணி நட்சத்திரங்கள்
- தற்போது தமிழக அரசு பரிசு பெறுபவர்களின் முன்னணி நட்சத்திரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
- சிறந்த நடிகர்கள்: விஜய் சேதுபதி, கார்த்தி, தனுஷ், ஆர். பார்த்திபன், சூர்யா, ஆர்யா மற்றும் விக்ரம் பிரபு.
- சிறந்த நடிகைகள்: கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சு வாரியர், அபர்ணா முரளி, லியோ மோல் ஜோஸ் மற்றும் சாய் பல்லவி.
- சிறந்த திரைப்படங்கள்: மாநகரம், அறம், பரியேறும் பெருமாள், அசுரன், கூழாங்கல், ஜெய்பீம் மற்றும் கார்கி.

சின்னத்திரை விருதுகள்
- சின்னத்திரை கலைஞர்கள் 2014 முதல் 2022 வரையிலான விருதுகள் பட்டியல்
- நடிகர்கள்: பாண்டியராஜன், கிருஷ்ணா, தலைவாசல் விஜய், ஜெய் ஆகாஷ், கார்த்திக் ராஜ் உள்ளிட்டோர்.
- நடிகைகள்: ராதிகா சரத்குமார், வாணி போஜன், ரேவதி, சைத்ரா உள்ளிட்டோர்.
- சிறந்த தொடர்கள்: எதிர்நீச்சல், சுந்தரி, செம்பருத்தி, நந்தினி போன்ற மக்கள் மனதைக் கவர்ந்த தொடர்கள் தேர்வாகியுள்ளன.

பரிசுத்தொகை
சிறந்த திரைப்படங்களுக்கு ரூ.75,000 முதல் ரூ.2 லட்சம் வரை பரிசுத் தொகை வழங்கப்படும்.
பெண்களை உயர்வாகச் சித்தரிக்கும் படங்களுக்கு சிறப்புப் பரிசாக ரூ.1.25 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு ஒரு பவுன் தங்கப் பதக்கம் மற்றும் நினைவுப்பரிசு வழங்கப்படும்.
பிப்ரவரி 13-ம் தேதி நடைபெறும் விழாவில், தமிழக துணை முதல்வர் திரு. உதயநிதி ஸ்டாலின் விருதுகளை வழங்கி கௌரவிக்க உள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |