செந்தில் மகனுக்கு மாமனார் வைத்த செக்.. காதலுக்காக தூக்கி வீசிய பிரபலம்
நகைச்சுவை நடிகர் செந்திலை போன்று சினிமாவில் சாதிக்க நினைத்த மகன் காதலுக்காக செய்த தியாகம் சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
நடிகர் செந்தில்
தமிழ் சினிமாவில் கடைசி வரை முன்னணி நகைச்சுவை நடிகராக கொடிகட்டி பறந்தவர் தான் நடிகர் செந்தில்.
இவர், பிரபலமாக இருந்த காலகட்டத்தில் படத்திற்கு கதாநாயகருக்கு முதல் இவரிடம் தான் கால்ஷீட் வாங்குவார்களாம். அந்தளவு தன்னுடைய திறமையால் சாதித்து காட்டியுள்ளார்.
ஒரு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 20 முதல் 25 படங்களில் நடித்து வந்திருக்கிறார். அப்போது அவருடன் கவுண்டமணியும் சேர்ந்து நடித்திருக்கிறார். இவர்களின் ஜோடி நன்றாக இருந்த காரணத்தினால் அநேகமான படங்களில் இருவரையும் ஒன்றாக பார்க்கக் கூடியதாக இருந்தது.
கவுண்டமணி - செந்தில் கூட்டணியில் நூறுக்கும் மேற்ப்பட்ட திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இவர்களின் கூட்டணி வெளியான சில காட்சிகள் சுமாராக 36 ஆண்டுகள் கடந்திருந்தாலும், இன்னும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
காதலுக்காக செய்த தியாகம்
இப்படி சினிமாவில் பிஸியாக இருந்த நடிகர் செந்திலுக்கு இரண்டு மகன்கள் உள்ளன. அதில் மூத்த மகனான மணிகண்ட பிரபு மருத்துவராக இருந்து பலருக்கும் உதவி செய்துக் கொண்டிருக்கிறார்.
செந்தில் குடும்பத்தில் அதிகம் படித்து மருத்துவராகிய மணிகண்ட பிரவு, மருத்துவர் ஆவதற்கு ஒரு கதை இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
அதாவது, தன்னுடைய அப்பாவை போன்று சினிமாவில் சாதிக்க நினைத்த மணிகண்ட பிரவு ஜனனி என்கிற பல் மருத்துவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் பெரிதாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
ஆனாலும் மணிகண்ட பிரபு நடிக்க கிளம்பியதும் ஜனனிக்கு பயம் வந்து விட்டதாம். ஏனெனின் ஜனனியின் தந்தை தன்னுடைய மகளை ஒரு மருத்துவருக்கு தான் திருமணம் செய்து கொடுப்பேன் என்று கூறி விட்டராம். காதலியை கரம்பிடிப்பதற்காகவே மணிகண்ட பிரபு மருத்துவர் படிப்பை படித்துள்ளார்.
காதலுக்காக செந்தில் மகன் செய்த விடயம் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |