வாய் மேல் வாய் வைத்து பாம்பிற்கு உயிர் கொடுத்த நபர் - வைரல் காணொளி
பாம்பு ஒன்று மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய நிலையில் தற்போது அதன் வாய் மேல் வாய் வைத்து ஒரு நபர் அதற்கு உயிர் கொடுத்துள்ளார்.
வைரல் காணொளி
குஜராத்தின் வல்சாத்தில் வனவிலங்கு மீட்பாளர் ஒருவர், மின்சாரம் தாக்கி மயங்கி கிடந்த ஒரு பாம்பை, வாயுடன் வாய் வைத்து CPR மூலம் உயிர்ப்பித்துள்ளர். நாம் இதுவரை இதை எல்லாம் மனிதர்களுக்கு செய்து பார்த்திருப்போம். பாம்பிற்கு செய்தது இதுவே முதல் முறை.
இரையைத் தேடி, மூன்று கட்ட மின் கம்பியில் ஏறிய அந்தப் பாம்பு, மின்சாரம் தாக்கி சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தரையில் விழுந்து மயக்கமடைந்தது என கூறப்படுகின்றது.
இதன் பின்னர் உள்ளூர் பாம்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் பத்தாண்டு கால அனுபவமும் பயிற்சியும் பெற்ற வனவிலங்கு மீட்பாளர் ஒருவரை கிராமவாசிகள் தொடர்பு கொண்டுள்ளனர். பின்னர் அவர் அந்த பாம்பை CPR மூலம் உயிர்பித்துள்ளார்.

அந்த பாம்பை கவனித்த அவர் பாம்பு அசையாமல் இருப்பதைக் கண்டார். இதன் பி்ன்னர் அவர் வாயுடன் வாய் வைத்து புத்துயிர் கொடுத்து கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் இடைவெளியில் அதன் இதயப் பகுதியைத் தட்டினார்.
சுமார் அரை மணி நேர தொடர்ச்சியான முயற்சிக்குப் பின்னர் பாம்பு சுவாசம் மற்றும் அசைவு அறிகுறிகளைக் காட்டத் தொடங்கியது. பின்னர் அது முழுமையாக குணமடைந்த பின்னர் அருகிலுள்ள காட்டுப் பகுதியில் விடப்பட்டது. இந்த காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.
At dawn from the gateway to Mars, the launch of Starship’s second flight test pic.twitter.com/ffKnsVKwG4
— SpaceX (@SpaceX) December 7, 2023
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |