அசைவ சுவையில் மீல் மேக்கர் கிரேவி... மட்டன் கிரேவியே தோற்றுபோய்விடும்
மட்டன் கிரேவி சுவையில் சப்பாத்தி, பூரிக்கு மீல் மேக்கர் கிரேவி செய்வதைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மீல் மேக்கர் கிரேவி எப்பொழுதும் போன்று வைக்காமல் சற்று வித்தியாசமான முறையில் அசைவ குழம்பு ஸ்டைலில் வைத்தால் சப்பாத்தி, பூரிக்கு மிகவும் அருமையாகவே இருக்கும்.
அந்த வகையில் தற்போது மட்டன் கிரேவிக்கு சமமாக மீல் மேக்கர் கிரேவி எவ்வாறு வைப்பது என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
மீல் மேக்கர் - 1 கப்
தண்ணீர் -
உப்பு - 1/4 டீஸ்பூன்
அரைப்பதற்கு
வரமிளகாய் - 5
இஞ்சி - 3 இன்ச்
பூண்டு - 10 பல்
பெரிய தக்காளி - 1 (நறுக்கியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)

கிரேவிக்கு
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
பட்டை - 2 துண்டு
கிராம்பு - 4
அன்னாசிப்பூ - 1
சோம்பு - 1/2 டீஸ்பூன்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - 400 மிலி
கொத்தமல்லி - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை
பாத்திரம் ஒன்றில் சிறிதளவு தண்ணீரில் உப்பு சேர்த்து கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை அணைத்துவிட்டு அதில் மீல் மேக்கரை போட்டு 10 நிமிடம் ஊற வைக்கவும்.
10 நிமிடத்திற்கு பின்பு மீல் மேக்கரில் உள்ள தண்ணீரை எடுத்துவிட்டு, குளிர்ந்த நீரில் 3 முறை அலசி நன்றாக பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
மிக்ஸி ஜாரில் வரமிளகாய், இஞ்சி, பூண்டு, தக்காளி, வெங்காயம் போன்றவற்றை சேர்த்து அரைத்து தனியாக வைக்கவும். வாணலி ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து, சூடானதும் பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, சோம்பு இவற்றினை சேர்த்து தாளிக்கவும்.

இதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கியதும், அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து நன்றாக வதக்கிவிடவும். இதனுடன் மிளகாய் பொடி, மல்லி பொடி, சீரகம் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
பின்பு தண்ணீர் சேர்த்து ஒர 4 நிமிடம் பச்சை வாசனை போக வதக்கிவிட்டு, மீல் மேக்கர் சேர்த்து கிளறி மூடி வைத்து மீண்டும் 4 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
கிரேவி பதத்திற்கு வந்ததும், கொத்தமல்லி இலை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்கினால் மட்டன் சுவையில் மீல் மேக்கர் கிரேவி தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |