Bigg Boss: ஆட்டம் போட்ட திவ்யா, சாண்ட்ராவிற்கு கிடைத்த முத்திரை... சுயரூபத்தை காட்ட ஆரம்பித்த போட்டியாளர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடைபெற்ற காமெடி டாஸ்கில் சரியாக விளையாடாத போட்டியாளர்களாக வைல்டு கார்டு போட்டியாளர்களை பிக்பாஸ் வீட்டார் குறி வைத்துள்ளனர்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை 8 போட்டியாளர்கள் வெளியேறியுள்ள நிலையில் இந்த வாரம் மட்டும் 13 போட்டியாளர்கள் நாமினேஷனில் இருக்கின்றனர்.
வீட்டின் தலைவராக இந்த வாரம் எப்ஃஜே இருக்கும் நிலையில், இந்த வாரம் வைக்கப்பட்ட டாஸ்க் ஆரம்ப கட்டத்தில் மிகவும் சிரிப்பாகவே சென்று கொண்டிருந்தது.

ஆனால் பின்பு அனைவரும் மனதிற்குள் வஞ்சகம் வைத்து செயல்பட ஆரம்பித்தனர். இந்த வாரம் நடைபெற்ற டாஸ்கில் சரியாக செய்யாத டீம்மாக குக்கிங் டீம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் யார் சரியாக வேலை செய்யவில்லை என்ற கேள்விக்கு பெரும்பாலான போட்டியாளர்கள் சாண்ட்ரா, திவ்யா இருவரையும் கூறியுள்ளனர்.
சாண்ட்ரா, திவ்யா ருத்ரதாண்டவம் அடுத்து எவ்வாறு இருக்கும்? பிரஜன் யாரைக் குறித்து இப்படி பேசினார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏனெனில் பிரஜன் சாண்ட்ரா, திவ்யா கூட்டணிக்கு தான் அதிகமான ஆதரவு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |