Paneer Masala: பன்னீர் மசாலா கிரேவி இப்படி செய்து பாருங்க.... போட்டி போட்டு சாப்பிடுங்க
புரதச்சத்து நிறைந்த பனீர் சுவையான கிரேவி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பனீர்
பனீர் சத்தான உணவுகளில் ஒன்றாக மாறிவருகின்றது. இதில் அதிகப்படியான புரதச்சத்து இருக்கின்றது. இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.
பனீரை கடையில் வாங்குவதை விட வீட்டிலேயே மிக எளிமையாக செய்து அசத்தலாம். அதாவது எலுமிச்சை சாறு, வினிகர், மோர், தயிர் போன்ற சிட்ரிக் அமில பொருட்களில் ஒன்றினை பாலில் சேர்ப்பதன் மூலம் பனீர் கிடைத்து விடுகின்றது.

பனீரின் சுவையானது நீங்கள் பயன்படுத்தும் அமில மூலப்பொருட்களை கொண்டுள்ளது. தயிர் கொண்டு செய்யும் பனீர் மிகவும் மிருதுவாக இருக்கும்.
அதுவே எலுமிச்சை கொண்டு தயாரிக்கப்படும் பனீர் எலுமிச்சை வாசனை இருக்கும். இதனால் பனீரை நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும். தற்போது பனீர் மசாலா எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
நெய் - 4 டீஸ்பூன்
பனீர் - 100 கிராம்
மிளகாய் தூள் - ஒன்றரை ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
மல்லி தூள் - 1 ஸ்பூன்
சீரக தூள் - 1 டீஸ்பூன்
கரம்மசாலா - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சீரகம் - 1 ஸ்பூன்
பட்டை - 1 சிறிய துண்டு

கிராம்பு - 3
ஏலக்காய் - 3
ஸ்டார் பூ - 1
பிரியாணி இலை - 1
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
தயிர் - 2 ஸ்பூன்
தக்காளி - 2
இஞ்சி பூண்டு - 1 ஸ்பூன்
கடலை மாவு - 1 ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
வெல்லம் - 1 டீஸ்பூன்
மிளகாய் - 2
கொத்தமல்லி இலை - சிறிதளவு

செய்முறை
முதலில் கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் நெய் சேர்த்து, அரை ஸ்பூன் மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, சிறிதளவு உப்பு சேர்த்து பனீரை 1 நிமிடம் பொரித்து எடுக்கவும்.
மிக்ஸி ஜாரில் தக்காளி மற்றும் தயிர் இவற்றினை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பனீர் பொரித்த எடுத்து மீதம் இருக்கும் நெய்யில், பட்டை, சீரகம், ஏலக்காய், பிரியாணி இலை, ஸ்டார் பூ,கிராம்பு இவற்றினை போட்டு வறுக்கவும்.

பின்பு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும். பின்பு அதில் இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அதனுடன் கடலை மாவு சேர்த்து கைவிடாமல் நன்றாக கிளறிவிடவும். பின்பு அரைத்து வைத்துள்ள தக்காளி பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
தொடர்ந்து மிளகாய் பொடி, மல்லி பொடி, சீரக பொடி, கரம்மாசலா இவற்றினை சேர்த்து வதக்கி, சிறிதளது உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும். பின்பு பொரித்து வைத்துள்ள பனீரை சேர்க்கவும். அத்துடன் வெல்லத்தையும் சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.
கடைசியாக கீறி வைத்துள்ள பச்சைமிளகாய், மல்லிஇலை இவற்றினை சேர்த்து இறக்கினால் சுவையான பனீர் மசாலா கிரேவி தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |