Bigg Boss: வீடியோ கால் மூலமாக வந்த அட்வைஸ்! கண்கலங்கி நின்ற போட்டியாளர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று போட்டியாளர்களின் நண்பர்கள் தங்களது போட்டியாளர்களிடம் வீடியோ கால் மூலமாக பேசிய காட்சி வைரலாகி வருகின்றது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்யை தினம் கெமி வெளியேறினார். கெமியின் வெளியேற்றத்தை நினைத்து விஜய் சேதுபதியே மனம் மிகவும் கஷ்டப்பட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் கெமி கண்ணில் கண்ணீரை பார்க்க முடியாத விஜய் சேதுபதி தான் அணிந்திருந்த கண்ணாடியை கெமிக்கு கொடுத்துள்ளார்.

மேலும் அந்த கண்ணாடி துபாயிலிருந்து வாங்கியதையும், அதனை கெமிக்கே கொடுத்துவிட்டதாகவும் கூறி ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளார்.
இந்நிலையில் இன்றைய தினத்தில் பிக் பாஸ் வீட்டில் 12 பேர் நாமினேஷனில் உள்ளனர். திவ்யா, சாண்ட்ரா, பிரஜன், கம்ருதின், அமித், ரம்யா, வியானா, அரோரா, கனி, விக்ரம், எப்ஃஜே மற்றும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கும் பாரு என்று பிக்பாஸ் கூறியுள்ளார்.
கானா வினோத், சக்தி, இந்த வார தலைவரான சுபிக்ஷா இவர்கள் மூவரும் எவிக்ஷனிலிருந்து எஸ்கேப் ஆகியுள்ளனர். இந்நிலையில் போட்டியாளர்களின் நண்பர் வெளியே இருந்து போட்டியாளர்களிடம் பேசியுள்ளனர்.
இதில் எப்ஃஜே, கம்ருதின், கனி, பிரஜன் இவர்களிடம் பேசியுள்ளனர். ஆதலால் இனி வரும் நாட்களில் விளையாட்டு பயங்கரமாக சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
வியானா திவ்யா இடையே சர்க்கரைக்கு சண்டை ஏற்பட்ட நிலையில், வியானா தற்போது கண்கலங்கி அழுதுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |