Siragadikka Aasai: குடிகாரன் புத்தி என்னைக்கும் மாறாது... முத்துவை விளாசிய மீனா
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா வீட்டைவிட்டு வெளியேறுவதற்கு முத்துவிடம் வேண்டுமென்றே சண்டை போட்டுள்ள சம்பவம் ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினியின் உண்மை மீனாவிற்கு தெரியவந்துள்ள நிலையில், இதனால் வீட்டில் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றார்.
வீட்டில் மாமியாருக்கு பிடிக்காத மருமகளாக இருக்கும் மீனா, ஊருக்கு சென்ற போது ரோகினியின் உண்மையை அறிந்து கொண்டார்.

ரோகினி ஏற்கனவே திருமணமானவர், ஒரு குழந்தைக்கு அம்மா என்பதை அறிந்த மீனாவால் அடுத்து வீட்டில் எதார்த்தமாக இருக்கமுடியவில்லை.
உண்மையை மறைக்கும் குற்றஉணர்ச்சி மட்டுமின்றி, வீட்டு வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தவித்தும் வருகின்றார்.
இந்நிலையில் மீனா வீட்டைவிட்டு கிளம்புவதற்கு தயாரான நிலையில், முத்துவை வேண்டுமென்றே வெறுத்து சண்டை போட்டு தன் மீது கோபம் வரவைப்பதற்கு திட்டமிட்டுள்ளார்.
இதனால் முத்துவிடம் கோபத்தில் வார்த்தைகளை விட்ட மீனா முத்துவும் மீனாவை சத்தம் போட்டுவிட்டு வீட்டைவிட்டு வெளியேற தயாராகியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |