நரைத்த தாடியுடன் தந்தைக்கு சிம்பு கொடுத்த முத்தம்! சிம்பு திருமணம் குறித்து டி.ஆர் கூறியது என்ன?
அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய நிலையில், சிம்புவின் திருமணத்தை குறித்த தகவலையும் பகிர்ந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
நடிகர் டி ராஜேந்தர்
நடிகரும், இயக்கனருமான டி.ராஜேந்தர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உயர் சிகிச்சைக்காக கடந்த மாதம் 14 -ஆம் தேதி அமெரிக்கா சென்றார்.
சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற டி.ராஜேந்தர் சிகிச்சை முடிந்து இன்று அதிகாலை 4 மணியளவில் விமானம் மூலம் சென்னை திரும்பிய நிலையில், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

சிம்பு திருமணம் குறித்து டி ஆர்
சென்னை வந்த டி ராஜேந்தர் தனது ரசிகர்களுக்கு, தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்ததோடு, சிகிச்சை நல்ல விதத்தில் முடிந்து பழைய தெம்போடு உணர்வோடு தாய் மண்ணுக்கு வந்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
சிம்பு திருமணம் குறித்த கேள்விக்கு, இருமனம் ஒன்றுபட்டால் திருமணம் கடவுள் எழுதியது தான் நடக்கும். காலச்சக்கரம் சூழல ஆரம்பித்தால் கீழே இருப்பவர்கள் மேலே வருவார்கள் மேலே இருப்பவர்கள் கீழே வருவார்கள் எங்கள் இல்லத்திற்கு நல்ல குணமுடைய திருமகள், மருமகள் வருவாள் கடவுள் மீது நம்பிக்கை எனக்கு உள்ளது" என்று சிம்புவின் திருமணத்தை குறித்து கூறி்யுள்ளார்.
இந்நிலையில் அமெரிக்காவில் சிம்பு நரைத்த தாடியுடன் தனது தந்தைக்கு கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ள காட்சி தற்போது வைரலாகி வருகின்றது.
