அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் டி.ராஜேந்தர் செய்ய போகும் முதல் வேலை... என்ன தெரியுமா?
உடல்நலகுறைவால் சிகிச்சைக்காக கடந்த மாதம் அமெரிக்கா சென்ற டி ராஜேந்தர் பூரண குண்டமடைந்து நாளை தாயகம் திரும்புகிறார்.
சிகிச்சை முடிந்து சில நாட்களாக அமெரிக்காவில் ஓய்வில் இருந்த டி ராஜேந்தர் குடும்பத்தினருடன் நாளை அதிகாலை அதிகாலை 2 மணியளவில் சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உடல் நலம் பெற்று உற்சாகம் மற்றும் துடிப்புடன் பத்திரமாக நாடு திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்த ரசிகர்கள், குடும்ப நண்பர்கள், கலையுலக நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் டி ஆர் நன்றியை தெரிவித்தார்.
இந்தியா வந்ததும் டி ராஜேந்தர் செய்ய போகும் முதல் வேலை
மேலும், சென்னை வந்த பின் முதல் வேலையாக தனது சிகிச்சைக்காக உதவி செய்த மாண்புமிகு தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து நன்றி கூற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை, இலட்சிய திமுக தொண்டர்கள் டி ஆருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளார்கள்.