இந்த அறிகுறிகள் இருக்கா? உங்களுக்கு புரதச்சத்து குறைபாடு இருக்குதுன்னு அர்த்தம்...
புரதம் என்பது நம்முடைய உடலை வளர்ப்பதற்குத் தேவையான மிக அடிப்படையான ஊட்டச்சத்தாகும். உடலில் உள்ள ஒவ்வொரு செல்கள், திசுக்கள், உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்கவும் அவை சிறப்பாக செயற்படவும் புரதம் இன்றியமையாதது.
உடலுக்கு அதிகமாக தேவைப்படும் ஊட்டச்சத்தும் இதுதான். இந்த புரதச்சத்து பற்றாக்குறை ஏற்படும்போது உடலில் சில முக்கிய அறிகுறிகள் தோன்றும்.
புரோட்டீன் குறைப்பாட்டு அறிகுறிகள்
உடலில் புரதம் குறைய ஆரம்பிக்கும் போது தசை வலிமை குறைகிறது. இதனால் உடல் வடிவத்திலும் மாற்றம் ஏற்படும். எந்த வேலையையும் சாதாரணமாக செய்ய முடியாத நிலை இருக்கும்.சிறிய வேலையை செய்தால் கூட உடல் தசைகளில் அதிகப்படியான வலி தோன்றும்.
உடலில் புரதம் குறைவாக இருந்தால், கூந்தல் உதிர்வு பிரச்சினை அதிகரிக்கும். சிலருக்கு நரை முடியும் தோன்ற ஆரம்பிக்கும்.தரைமுடியில் இருக்கும் இயற்கையாக பளபளப்பு போய்விடும்.இந்த பிரச்சனை உள்ளவர்கள் புரதம் நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
உடலில் புரதச் சத்து குறையும் போது நோய் எதிர்ப்பு மண்டலமும் பாதிக்கப்படுகின்றது. இதனால் அடிக்கடி நோய்வாய்ப்படுவார்கள். வேலை செய்வதில் நாட்டம் இருக்காது. சிறிய வேலை செய்தாலும் உடனே உடல் சோர்வடைந்துவிடும். சரியான தூக்கமின்மை மன குழப்பம் போன்ற பிரச்சினைகளும் ஏற்படும்.
புரத குறைப்பாடு இருந்தால் உடல் எடை வெகுவாக குறைவதை உணர்வீர்கள். எனவே உடல் எடையில் சடுதியான மாற்றம் ஏற்ப்பட்டால் புரதச் சோதனை செய்து கொள்வது நல்லது.
உடலில் புரதச்சத்து குறையும் பட்சத்தில் நாங்கள் அடிக்கடி உடைய ஆரம்பிக்கும் மேலும் நக வளர்ச்சியும் குறையும். சிலருக்கு சில பகுதிகளில் வீக்கங்களும் தோன்றும்.
இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்தாமல் விரைவாக புரதச் சோதனை செய்து கொள்வது அவசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |