சூடான உணவில் எலுமிச்சை சாறு சேர்க்கலாமா? இது தெரிஞ்சா இனிமேல் பண்ணவே மாட்டீங்க
எலுமிச்சையில் வைட்டமின்-சி அதிகமாக காணப்படுகின்றது என்பது அனைவரும் அறிந்ததே ஆனால் அதனை சமையலின் போது பயன்படுத்தலாமா?எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து நம்மில் பலரும் அறிந்திருப்பதில்லை.
எலுமிச்சையை உணவில் பயன்படுத்தும் போது சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அப்போது தான் இதில் அடங்கியுள்ள வைட்டமின்-சி உடலுக்கு போய் சேரும். இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
காய்சல் மற்றும் ஜலதோஷம் ஆகியவற்றுக்கு வைத்தியரிடம் மருந்து எடுக்க சென்றிருப்போம். ஏனைய என்டிபயோட்டிக் மருந்துகளை பரிந்துரைக்கும் போது எதனையும் குறிப்பிட்டு சொல்லாமல் வைட்டமின்- சி பரிந்துரைக்கப்படும் போது மாத்திரம் அதனை சப்பி சாப்பிட சொல்லுவார்கள். இது ஏன் என்று யோசித்திருக்கின்றீர்களா?
ஏனைய மருந்துகளை போல் இதனையும் வாயில் போட்டு தண்ணீரை குடித்தால் என்ன? வைட்டமின் -சி வெப்பத்திலும் தண்ணீரிலும் அழிவடையும் தன்மை கொண்டது. அதனால் தான் வைட்டமின்-சி வில்லைகளை தண்ணீருடன் சேர்த்து எடுக்க வேண்டாம் என குறிப்பிடுகின்றார்கள்.
இதே போல் தான் எலுமிச்சையும் நாம் வைட்டமின்-சி யை பெற்றுக்கொள்ளவே சமையலில் பயன்படுத்துகின்றோம்.
ஆனால் இதனை மிகவும் சூடான உணவுகளில் கலப்பதன் மூலம் வைட்டமின்-சி அழிவடைந்துவிடுகின்றது.எனவே இதனை பயன்படுத்துவதில் எதுவித நன்மையும் கிடைக்கப்போவதில்லை.
உணவில் எலுமிச்சையை பயன்படுத்தும் போது சமைக்கும் போதே பயன்படுத்தாமல் உணவின் வெப்பம் தணிந்த பின்னர் எலுமிச்சை சாறு சேர்ப்பதால் உடலுக்கு தேவையான வைட்டமின்-சி முழுமையாக கிடைக்கும்.
அதன் காரணமாகத்தான் சமையலில் இறுதியாக அதாவது வெப்பம் தணிந்த பின்னரே எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். ஒருபோதும் சமைக்கும் போதே எலுமிச்சை சாறு பயன்படுத்தாதீர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |